OUR CLIENTS
அரசு மருத்துவக்கல்வித் துறையில் தொடர்ந்து புரட்சி! : அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்
அரசு மருத்துவக்கல்வித் துறையில் தொடர்ந்து புரட்சி! : அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் Posted on 30-May-2017 அரசு மருத்துவக்கல்வித் துறையில் தொடர்ந்து புரட்சி!   :  அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

சென்னை, மே 30-
புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, மாநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய சிகிச்சை அளிக்கும் வகையில் முதல் நிலை (Primary)  இரண்டாம் நிலை (Secondary) மற்றும் உயர்நிலை (Tertiary) சுகாதார சேவை அமைப்புகளை தரம் உயர்த்தி வருகிறது.  இந்தியாவில் உயரிய மருத்துவ சேவை பெற வசதியுள்ள இடமாக (Medical Hub) தமிழ்நாடு கருதப்படுகிறது.  மேலும், இறந்தோரின் உடல் உறுப்புகளை மாற்று அறுவை சிக்சைக்கு பயன்படுத்துவதிலும் (Cadaveric Transplantation) நாட்டிலேயே முன்னிலை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.  இதற்காக மத்திய அரசிடமிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இரண்டு முறை தொடர்ந்து விருது வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வரசு மக்கள் நலனில் மட்டுமல்லாமல் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் முதல் கடைநிலை பணியாளர் வரை உள்ளவர்களின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அந்த வகையிலே, இன்று 30.05.2017 மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் அவர்கள், ‘ஏ’,‘சி’,’டி’, மற்றும் ‘ஈ’ பிரிவு அலுவலர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கான குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்பித்தார்கள்.  இதன் மூலம் மருத்துவர் முதல் பணியாளர்கள் வரை 38 நபர்கள் பயனடைவார்கள். மேலும் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலையும் திறந்து வைத்தார்கள்.  

1965ஆம் ஆண்டு 50 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுடன் துவக்கப்பட்ட செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி, சமீபத்தில் மாண்புமிகு அம்மாவின் அரசு  100 இடங்களாக உயர்த்தியது.  இதேபோன்று 29 பட்டமேற்படிப்பு இடங்களுடன் செயல்பட்டு வந்த இந்த கல்லூரியில் பட்டமேற்படிப்பு இடங்கள் தற்பொழுது 62-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 20 இடங்கள் உயர்த்துவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  இதன் மூலம் மாண்புமிகு அம்மாவின் அரசு ஏழை எளிய மக்களின் நலனில் உள்ள அக்கறையை பறை சாற்றியுள்ளது என்றால் அது மிகையல்ல. 

மேலும், செங்கல்பட்டில் செவிலியர் கல்லூரிக்கான கட்டிடங்கள் மற்றும் தங்கும் விடுதி கட்டுவதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு சமீபத்தில் ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.   மேலும், உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான கட்டிடங்களை (Super Speciality Block) கட்டவும் திட்டமிட்டுள்ளது.

இந்த விழாவில்  ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே. பழனி, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. கோதண்டபாணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  வாலாஜாபாத் கணேசன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்., மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்   பா. பொன்னையா,  மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 

Label