OUR CLIENTS
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் : அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் : அமைச்சர் விஜயபாஸ்கர் Posted on 30-May-2017 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம்  : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, மே 30-
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள்த லைமையில் 29.05.2017 அன்று சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி மைய கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச்செ யலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலர் / இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மோகன்பியாரே, மருத்துவக் கல்வி இயக்குநர் மரு ஏ. எட்வின் ஜோ மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொலைநோக்குப் பார்வையோடும் சீரிய தலைமையின் கீழ் இயங்கி வரும் மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு தரப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் புரட்சிகரமான பல முன்னோடி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி அனைத்து தரப்பினரின் பாராட்டுதலை தொடர்ந்து பெற்று வருகிறது. மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதார அகட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மருத்துவ மனித வளத்தை பெருக்குதல் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டுண் 5 மருத்துவக் கல்லூரிகள் புதியதாக உருவாக்கப்பட்டு 1000-க்குண் மேற்பட்ட மருத்துவப் பட்டப் படிப்பிற்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 500-க்குண் மேற்பட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்கள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், முழு உடல் பரிசோதனை திட்டம், மூளைச் சாவு சான்றளித்தல், மூளைச்சாவடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளை அறுவடை செய்தல், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகளை இரண்டாம் கட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்துதல், முதல் மற்றும் இரண்டாம் கட்ட டயாலிசிஸ் சேவைகள், புதிய தாய்ப்பால் வங்கிகள் உருவாக்கம் மற்றும் செம்மைபடுத்துதல், செயற்கை அவயம் மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகள், தொற்றா நோய்கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுதல், விபத்து மற்றும் உயிர் காக்கும் சிகிச்சை சேவைகளை நவீனப்படுத்துதல், சுத்தமான மற்றும் பசுமை சூழ் வளாகங்களை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த கல்லூரி முதல்வர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

உயர் நிலை மருத்துவ சேவை  வழங்குவதில் 51 ஆண்டு வரலாறு கொண்ட மருத்துவக் கல்வி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள் பலதரப்பட்ட மக்களின்சி றப்பு மருத்துவ சேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக வெகுச்சிறப்பாக செயல்பட அமைச்சர் மேலும் ஆலோசனைகளை வழங்கினார்.

Label