OUR CLIENTS
பாலில் வேதிப் பொருட்கள் கலப்பு தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் விரைவில் கைது!
பாலில் வேதிப் பொருட்கள் கலப்பு தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் விரைவில் கைது! Posted on 30-May-2017 பாலில் வேதிப் பொருட்கள் கலப்பு தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் விரைவில் கைது!

சென்னை, மே 30-
கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

வேதிப் பொருட்கள் கலந்துள்ள பாலை அருந்துபவர்களுக்கு சிறுநீரக செயல் இழப்பு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாக அமைச்சர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.பால் கெடாமல் இருக்க கலக்கப்படும் அமில விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும்.பாலில் வேதிப் பொருட்கள் கலந்த தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார். பாலை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆய்வகங்களை வளைக்க தனியார் நிறுவனங்கள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பத்து நாட்கள் கெடாமல் இருக்கும் பாலை தரும் மாடுகள் எது என்று தனியார் நிறுவனங்கள் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Label