OUR CLIENTS
உலகின் மிகப்பெரிய விமானத்தை கட்டமைத்தார் பால் ஆலன்
உலகின் மிகப்பெரிய விமானத்தை கட்டமைத்தார் பால் ஆலன் Posted on 02-Jun-2017 உலகின் மிகப்பெரிய விமானத்தை கட்டமைத்தார் பால் ஆலன்

கலிஃபோர்னியா, ஜூன் 2
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பில் கேட்சுடன் இணைந்து தொடங்கிய பால் ஆலன் உலகின் மிகப்பெரிய விமானத்தைக் கட்டமைத்துள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனத்தில் விமானத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் இறக்கைககள் மட்டும் ஒரு கால்பந்து விளையாட்டு மைதானத்தை விட பெரியதாக இருக்கிறது. விமான இறக்கைகள் 385 அடி நீளமும் 50 அடி உயரமும் கொண்டுள்ளன. விமானம் 226 டன் எடை கொண்டுள்ளது. 
113 டன் எரிபொருளை சேமிக்கும் வசதி கொண்டது.28 சக்கரங்கள் ஆறு ஜெட் என்ஞ்சின்களுடன் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் 
தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு மலை போல் காட்சி அளிக்கிறது.

 எனினும் இது பயணிகளுக்காக வடிவமைக்கப்படவில்லை. ராக்கெட்டுகளை சுமந்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. 1000 டன் வரை எடை கொண்ட சிறிய வகை ராக்கெட்டுகள் இந்த விமானத்தின் வயிற்றுப் பகுதியுடன் இணைக்கப்படும். 35,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது ராக்கெட்டுகள் விடுவிக்கப்பட்டு விண்ணில் ஏவப்படும். பின்னர் விமானம் தரைக்குத் திரும்பி அடுத்த ராக்கெட்டை எடுத்துச் செல்லும்.

Label