OUR CLIENTS
கூட்டு கடற்படைப் பயிற்சி குறித்த இந்திய முடிவுக்கு சீனா வரவேற்பு
கூட்டு கடற்படைப் பயிற்சி குறித்த இந்திய முடிவுக்கு சீனா வரவேற்பு Posted on 02-Jun-2017 கூட்டு கடற்படைப் பயிற்சி குறித்த இந்திய முடிவுக்கு சீனா வரவேற்பு

சீனா, ஜூன் 2
அமெரிக்கா, ஜ ப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்கேற்கும் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கப் போவதில்லை என்ற இந்தியாவின் முடிவை சீனா வரவேற்றுள்ளது. வங்காள விரிகுடாவில் இந்தியா, அமெரிக்க கடற்படை பல ஆண்டுகளாக கூட்டு பயிற்சி நடத்தின.

இதில் ஜப்பான் இணைந்ததோடு, தற்போது ஆஸ்திரேலியாவும் பங்கேற்க உள்ளது. இது சீனாவுக்கு எதிரான பயிற்சியாக இருக்கும் என சீன ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இந்த பயிற்சியில் பங்கேற்குமாறு, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்கப் போவதில்லை என இந்தியா முடிவெடுத்துள்ளது. இதை சீன அரசு வரவேற்றுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சூயிங் ((பிuணீ சிலீuஸீஹ்வீஸீரீ)), கூட்டு பயிற்சியில் பங்கேற்க போவதில்லை என இந்தியா முடிவை சீனா வரவேற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Label