OUR CLIENTS
5 ஆயிரம் தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்
5 ஆயிரம் தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் Posted on 05-Jun-2017 5 ஆயிரம் தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

இஸ்லாமாபாத், ஜூன் 5
பாகிஸ்தான் நாட்டில் 5 ஆயிரம் தீவிராதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.=

பாகிஸ்தானில் கடந்த 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

அதை தொடர்ந்து தீவிரவாதிகள் மீதான நடவடிக்கையை அரசும், ராணுவமும் தீவிரப்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மேலும் தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

அவர்களது அடையாள அட்டையும், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது. 20 அம்ச தேசிய திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் 6-வது சரத்துப்படி தீவிரவாதிகள் மற்றும் அமைப்புகளின் நிதி நிலையை முடக்கும் நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 அந்த வகையில் 5 ஆயிரம் தீவிராதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களின் கணக்கில் இருந்த ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Label