OUR CLIENTS
லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் இந்தியா&பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு
லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் இந்தியா&பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு Posted on 05-Jun-2017 லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் இந்தியா&பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு

பர்மிங்காம், ஜூன் 5
8-வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. 

இதில் 8 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மோதிய 2-வது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம்  நடந்த 3-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 96 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

4-வது ‘லீக்’ ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜபஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்தியா - சர்பிராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்து இருக்கும்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. வானிலை நிலவரப்படி பிற்பகலில் மழை பெய்யலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் லண்டனில் 2 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதையொட்டி இந்தியா- பாகிஸ்தான் வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியை சீர்குலைக்கும் வகையில் எட்ஜ்பஸ்டனிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இங்கிலாந்து உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் வீரர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பெரும் பீதி அடைந்து உள்ளனர். உளவுத்துறையின் எச்சரிக்கையில் 
மேலும் அச்சத்தில் உள்ளனர். இங்கிலாந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். வீரர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை அவர்கள் அளித்து உள்ளனர்.

Label