OUR CLIENTS
திருப்பதி வனப்பகுதியில் பரவிய காட்டூத் தீ 200 ஏக்கர் மரங்கள் சேதம்
திருப்பதி வனப்பகுதியில் பரவிய காட்டூத் தீ 200 ஏக்கர் மரங்கள் சேதம் Posted on 06-Jun-2017 திருப்பதி வனப்பகுதியில் பரவிய காட்டூத் தீ 200 ஏக்கர் மரங்கள் சேதம்

திருப்பதி, ஜூன் 6
திருப்பதியில் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 200 ஏக்கர் மரங்கள் எரிந்து சாம்பலானது.

திருப்பதியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாதாள மண்டப பகுதியின் பின்புறம் உள்ள தூர்தர்‌ஷன் ஒளிபரப்பு கோபுரப் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென்று காட்டுத் தீ ஏற்பட்டது.  தீயணைப்புத் துறை ஊழியர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் 200 ஏக்கரில் வளர்ந்துள்ள மரங்கள், மூலிகை செடிகள் தீக்கிரையானது. காட்டுத் தீ ஏற்பட்ட இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடினர்.  பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Label