OUR CLIENTS
தயார் நிலையில் ஸ்ரீதேவியின் மாம் திரைப்படம்
தயார் நிலையில் ஸ்ரீதேவியின் மாம் திரைப்படம் Posted on 06-Jun-2017 தயார் நிலையில் ஸ்ரீதேவியின் மாம் திரைப்படம்

இறைவன் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால்தான் தாயைப் படைத்தான் என்ற பொன்மொழியை அடிப்படையாகக் கொண்டு, பாலிவுட்டில் தயாராகியுள்ள புதிய படம் மாம்( mom).

இதில் இளம் பெண்ணின் தாயாக நடிகை ஸ்ரீதேவி அழுத்தமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். பெற்றோர் தங்கள் பதின்பருவ பிள்ளைகளுக்கு புத்தி சொல்வதைவிட அவர்களைப் புரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று கூறும் பாத்திரத்தில் ஜொலிக்கிறார் அவர். 

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வித்தியாசமாக நடித்து பேர் வாங்கிய நவாசுதீன் சித்திக்கின் நடிப்புக்கும் அக்சய் கன்னாவின் வித்தியாசமான பாத்திரத்திற்கும் இப்படம் சவாலாக அமைந்துள்ளது.பாகிஸ்தான் நடிகை சாஜல் அலி ஸ்ரீதேவியின் மகளாக நடிக்கிறார்.

Label