OUR CLIENTS
கத்தார் உடனான உறவை துண்டித்த 4 நாடுகள்
கத்தார் உடனான உறவை துண்டித்த 4 நாடுகள் Posted on 06-Jun-2017 கத்தார் உடனான உறவை துண்டித்த 4 நாடுகள்

கத்தார், ஜூன் 6 
கத்தார் நாட்டுடனான உறவை நான்கு இஸ்லாமிய நாடுகள் துண்டித்துள்ளன.

கத்தார் தீவிரவாதவாதத்தை வளர்த்து வருவதாக் கூறி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, பெஹ்ரைன் ஆகிய நாடுகள் அந்நாட்டுடனான தூதரக ரீதியிலான உறவைத் துண்டித்துக்கொண்டுள்ளன. கத்தார் நாடு தனது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக பெஹ்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

கத்தார் தூதரக அதிகாரிகள் அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாகவும், கத்தார் நாட்டு மக்கள் இரண்டுவார காலத்திற்குளாகவும் பெஹ்ரைனை விட்டு வெளியேறுமாறு அந்நாடு கெடு விதித்துள்ளது.

 அதன் பிறகு கத்தார் உடனான விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை நிறுத்திக்கொள்ளப்போவதாகவும் பெஹ்ரைன் அறிவித்துள்ளது.

Label