OUR CLIENTS
லண்டன் தாக்குதலுக்கு இரங்கல் ஈபிள் கோபுர விளக்குகள் அணைத்து இரங்கல்
லண்டன் தாக்குதலுக்கு இரங்கல் ஈபிள் கோபுர விளக்குகள் அணைத்து இரங்கல் Posted on 06-Jun-2017 லண்டன் தாக்குதலுக்கு இரங்கல் ஈபிள் கோபுர விளக்குகள் அணைத்து இரங்கல்

பிரான்ஸ், ஜூன் 6
லண்டன் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்வகையில், பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. லண்டனில் தீவிரவாதிகள் அரங்கேற்றிய ரத்தவெறி தாக்குதலில் 7 பேர் பலியானதோடு, 48 பேர் படுகாயமடைந்தனர்.

இதில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, பாரிசில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியே இருளில் மூழ்கியது.

பாக்தாத் மற்றும் காபூல் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு இரங்கல் தெரிவித்து, இந்த வாரத்தில் மட்டும் ஏற்கனவே 2 முறை ஈபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Label