OUR CLIENTS
மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் நிதின், ரீத் ரிஷ்யா சாம்பியன்
மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் நிதின், ரீத் ரிஷ்யா சாம்பியன் Posted on 06-Jun-2017 மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் நிதின், ரீத் ரிஷ்யா சாம்பியன்

சென்டர் கோர்ட் டேபிள் டென்னிஸ் கிளப் சார்பில் இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஒ.சி) ஆதரவுடன் முதலாவது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 3 தினங்களாக நடந்தது.

இதன் ஆண்கள் பிரிவில் நிதின் திருவேங்கடம் சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 11-13, 11-9, 11-6, 11-3, 11-5 என்ற கணக்கில் ஆனந்த்ராஜை வீழ்த்தினார். பெண்கள் பிரிவில் ரீத் ரிஷ்யா 11-8, 10-12, 11-5, 8-11, 11-8, 6-11, 12-10 என்ற கணக்கில் அம்ருதா புஷ்பக்கை போராடி வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

மற்ற பிரிவுகளில் டி.ஆனந்த், எஸ்.யாஷினி (யூத்), பியூஸ் சாகர், ஷெலீனா தீப்தி (ஜூனியர்), பிரயேஷ் ‌ஷர்மிதா (சப்-ஜூனியர்), பிரயேஷ், நேகல் (கேடட்), அபினந்த், ஷெர்வானி (மினி கேடட்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் செயல் இயக்குனர் (தென்மண்டலம்) செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து பரிசுகளை வழங்கினார். போட்டி அமைப்பு குழு தலைவரும், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க பொருளாளருமான ஜே.செல்வகுமார் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

Label