OUR CLIENTS
10ஆம் வகுப்பு பாஸ் செய்தால் ரூ.10 ஆயிரம் பரிசு
10ஆம் வகுப்பு பாஸ் செய்தால் ரூ.10 ஆயிரம் பரிசு Posted on 07-Jun-2017 10ஆம் வகுப்பு பாஸ் செய்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

உ.பி., ஜூன் 7
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு அளிப்பதாக உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான தினேஷ் சர்மா கடந்த திங்கட்கிழமையன்று துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடன் பேசிய அவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.10,000 உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

மாநிலம் முழுவதும் இருந்து மெரிட் அடிப்படையில் மாணவிகளின் பெயர் பட்டியல் பெறப்பட்டு முதல் ஒரு லட்சம் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label