OUR CLIENTS
காலா படத்தில் சின்ன வயது ரஜினியாக நடிக்கும் தனுஷ்?
காலா படத்தில் சின்ன வயது ரஜினியாக நடிக்கும் தனுஷ்? Posted on 07-Jun-2017 காலா படத்தில் சின்ன வயது ரஜினியாக       நடிக்கும் தனுஷ்?

கபாலி படத்தை இயக்கிய ப.ரஞ்சித் மீண்டும் ரஜினியை வைத்து காலா 
கரிகாலன் என்ற படத்தை இயக்கி வருகிறார். 

இந்த திரைப்படத்தை ரஜினியின் மருமகன் தனுஷின் வுண்டர் பார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

காலா கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. படம் குறித்து அறிவிக்கப்பட்டது முதல் அந்த படத்தின் கதை பற்றியும் படத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் இணையத்தில் பல தகவல்கள் வலம் வருகின்றன.

இந்நிலையில் தற்போது புதிய செய்தியாக காலா கரிகாலன் படத்தில் நடிகர் தனுஷும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ப.பாண்டி திரைப்படத்தில் சின்ன வயது ராஜ்கிரணாக தனுஷ் நடித்திருப்பார். இது நல்ல வரவேற்பையும் பெற்றது.

அதே போல காலா கரிகாலன் படத்தில் பிளாஷ்பேக்கில் சின்ன வயது ரஜினியாக தனுஷ் நடிப்பார் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிப்பும் வெளியாகவில்லை.

Label