OUR CLIENTS
அதிகரிக்கும் புவி வெப்பம் அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்
அதிகரிக்கும் புவி வெப்பம் அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள் Posted on 07-Jun-2017 அதிகரிக்கும் புவி வெப்பம் அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்

ஆஸ்திரேலியா, ஜூன் 7
அதிகரித்து வரும் புவி வெப்பம் காரணமாக ஆஸ்திரேலிய பவளப்பாறைகள் அழிவின் விளிம்பில் இருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகள் தொகுதி ஆஸ்திரேலியவின் குயின்ஸ்லாந்து கடல் பகுதியில் அமைந்துள்ளது. 2,900 பவளப் பாறைகள், 900 சிறு தீவுகளுடன் 3,44,000 சதுர கிலோமீட்டருக்கு பரவியுள்ள இந்த பவளப்பாறை தொகுதி உலக பாரம்பரிய தளமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பவளப்பாறைகள் நிறைந்த பகுதியில் பல்லுயிர்ப் பெருக்கமும் , சூழலியல் சுழற்சியும், புவி வெப்பமய கட்டுப்பாடும் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த பவளப்பாறைகள் 
தொகுதியே புவி வெப்பமயமாதலால் அழிவை சந்தித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமேசான் காடுகள், சுந்தரவனக் காடுகள் , இமயமலை, ஆல்ப்ஸ் மலை போன்ற அரிய வளங்களை அழியாமல் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Label