OUR CLIENTS
திருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்! மின்வாரிய செயற்பொறியாளர் உடந்தையா?
திருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்! மின்வாரிய செயற்பொறியாளர் உடந்தையா? Posted on 08-Jun-2017 திருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி  செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்!  மின்வாரிய செயற்பொறியாளர் உடந்தையா?

சென்னை, ஜூன் 8
சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி செயல்படுகிறது வெங்கடாச்சலம் மெயின்ரோட்டில் சாய் காம்ப்ளக்ஸ். இதற்கு மின்வாரிய செயற்பொறியாளர் உடந்தையாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. 

சென்னை என்றாலே சட்ட திட்டங்களை மீறி செயல்படுவோர் அதிகம் உள்ள பகுதியாக அண்மையில் இருந்து வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் பலே கில்லாடிகளாக உள்ளனர். இதற்கு ஒரு உதாரணம் சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள வெங்கடாச்சலம் மெயின்ரோட்டில் உள்ள ஸ்ரீசாய் காம்ப்ளக்ஸ் ஆகும். இங்கு விதிமுறைகள் மீறி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மின்வயர்கள் கைக்கு எட்டும் தொலைவில் உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மின்வாரிய செயற்பொறியாளர், இளமின்பொறியாளர், களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு 'ப' வைட்டமின் வாரி இறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கேட்ட இடத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை பார்க்கும் பலரும் இதுபோன்ற சட்டதிட்டங்களை மீறி செயல்பட ஆரம்பித்து விடுகின்றனர். 

வீடுகள், காம்ப்ளக்ஸ்கள் கட்டுவோர் முறையாக இடம் விட்டு கட்டடங்களை கட்டுவது இல்லை. அனைத்து கட்டடங்களிலும் விதிமீறப்படுகிறது. சட்டதிட்டங்கள் மதிக்கப்பட்டு பின்பற்றப்படுவதில்லை. சட்டப்படி 12 அடி தொலைவில் மின்வயர்கள் செல்ல வேண்டும் என்ற விதி இங்கு மீறப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் கையூட்டு என்ற நிலைக்கு மக்களே வந்துவிட்டனர். கையூட்டு வந்து விட்டால் போதும் மின்வாரிய அலுவலர்கள் கண்களை மூடிக் கொண்டும், வாய் பொத்திக் கொண்டும், மூச்சு விடாமல் பணியை செய்து முடித்து கொடுத்து விடுகின்றனர். இப்படியே நிலைமை சென்றால் நாட்டில் சட்ட திட்டங்கள் என்னாவது. சட்டம் என்று ஏன் உள்ளது. நிலையாணை என்று எதற்கு உள்ளது. 

இதை பின்பற்றுவோர் பணம் தராதவர்கள் மட்டுமேதான் என்பது தெள்ளத்தெளிவாகிறது. லஞ்சம் ஒழிந்தால்தான் அனைத்தும் முறைப்படுத்தப்படும். தவறான வழியில் செல்வது, நமது வேலை முடிந்தால் போதும் யாரைப்பற்றி நமக்கென்ன கவலை என்ற நிலை மாற வேண்டும். பணத்துக்கு ஆசைப்பட்டு மின்வாரிய அலுவலர்கள் தவறான இணைப்பு வழங்கி விடுகிறார்கள். 
இதுவே நாளடைவில் விலைமதிப்பில்லாத மனித உயிர்களை பலி வாங்கும் என்பது யாருக்கும் தெரியாது. இப்படித்தான் இந்த காம்ப்ளக்சில் வேலை செய்ய வடநாட்டு இளைஞர்களை மேல்தளத்தில் இரும்பு அஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டு அந்த சாய் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் தங்க வைத்திருந்தார். 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த பலத்த காற்று மழையில் அந்த ஷீட் காற்றில் பறந்து வந்து மின்வயர்கள் மீது விழுந்து வயரை அறுத்து விட்டது. இதனால் மின்வயர் அறுந்து தொங்கி கொண்டுள்ளது. இதை கூட மின்வாரிய களப்பணியாளர்கள் என்று கூறப்படும் ஃபீல்டு ஸ்டாப்கள் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் அந்த சாலையில் நடந்து செல்லும் அப்பாவி யார் மீதாவது இந்த வயர் அறுந்து விழுந்தால் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி அவர் பரிதாபமாக மரணத்தை தழுவுவார். யார் யாரோ செய்யும் தவறு யார் யாரையோ பலி வாங்குகிறது. இதைத்தான் பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்று சொல்வார்கள். 

இப்படி சட்டத்தை மதிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக தன் விருப்பம்போல செயல்படும் இதுபோன்ற கட்டட உரிமையாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பணத்துக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்த இந்த மின்வாரிய பொறியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் முன்வர வேண்டும். மின்வாரிய பொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய மேற்பார்வை பொறியாளர் முன்வர வேண்டும். 

இப்படி ஒருவராவது தண்டிக்கப்பட்டால்தான் மற்றவர்கள் தங்கள் பொறுப்பு உணர்ந்து செயலாற்றுவார்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கப்படும். இந்த காம்ப்ளக்சில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் மற்ற பணிகளையாவது முறையாக நடைபெற அந்த கட்டட உரிமையாளருக்கு நன்கு உரைக்கும் வகையில் அரசு அலுவலர்கள் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். மின்வாரிய அலுவலர்களின் செயல்பாடுகளை இனிவருங்காலங்களில் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label