OUR CLIENTS
பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்!
பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்! Posted on 08-Jun-2017 பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு  விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்!

மதுரை, ஜூன் 8-
தமிழகத்தில், பிளஸ் 1 பாடப் புத்தகங்கள், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இக்கல்வியாண்டு முதல், பிளஸ் 1 பொதுத் தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுக்கள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பாடநுநூல் விற்பனை கழகத்தில் இருந்து புத்தகங்கள் அனுப்புவதில் ஏற்படும் தாமதம் மற்றும் பாடநூல் கழகத்தில் இருந்து புத்தகங்களை பெறுவதில் பள்ளிகள் ஆர்வமில்லாதது ஆகிய காரணங்களால், பெற்றோர் தனியார் புத்தக டீலர்களிடம் விலைக்கு வாங்கி வருகின்றனர்.

 பாடநூல் கழகம் நிர்ணயித்த விலை அடிப்படையில் தான் டீலர்கள் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் மதுரை உட்பட பல மாவட்டங்களில் இரண்டு மடங்கு விலையில் விற்கப்படுகின்றன. ‘ஒரிஜினல்’ புத்தகங்கள் நகல் எடுக்கப்பட்டும் விற்கப்படுகின்றன. 

மதுரை டீலர் ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய பின், டீலர்களுக்கு ஜூனில் தான் பாடநூல் கழகம் சார்பில் புத்தகங்கள் வழங்கப்படும். அரசு பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் முழுவதும் அனுப்பப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

ஆனால் ஒருசில டீலர்களுக்கு, முன்பே புத்தகங்கள் கிடைத்து விடுகின்றன. அவர்கள் ‘விற்பனை’ என்ற பெயரில் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, கொள்ளை லாபம் அடிக்கின்றனர். இவர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

பெற்றோர் கூறியதாவது: பாடநூல் கழகத்தில் பிளஸ் 1 தமிழ்- 50, ஆங்கிலம் - 70, இயற்பியல் (1) - 80, இயற்பியல் (2) - 60, வேதியியல் (1)- 70, வேதியியல் (2) - 70, கணிதம் (1) - 80, கணிதம் (2) - 60, உயிர் தாவரவியல் - 80, உயிர் விலங்கியல் -70 என 690 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் டீலர்கள் 1300 ரூபாய்க்கு விற்கின்றனர். ‘தட்டுப்பாடு ஏற்பட்டால் புத்தகங்கள் கிடைக்காமல் போகுமோ,’ என்ற அச்சத்தில் இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

 சில டீலர்கள் இலவச புத்தகங்களை கூட, முதல் பக்கத்தை நீக்கவிட்டு விலைக்கு விற்கின்றனர். அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். கல்லா கட்டும் ‘கைடுகள்’ : பிளஸ் 1 பொதுத் தேர்வாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான வினாத்தாள் அமைப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. ஆனால் அதற்குள், ஒருசில பப்ளிகேஷன் சார்பில் பிளஸ் 1 வினாத்தாள் அமைப்புடன் ‘கைடுகள்’ விற்பனை செய்யப்படுகின்றன.  இவை, புத்தக மதிப்பை விட நான்கு மடங்காக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Label