OUR CLIENTS
மெக்சிகோவில் வெப்பமண்டல புயலால் கடும் நிலச்சரிவு: 38 பேர் பலியான சோகம்
மெக்சிகோவில் வெப்பமண்டல புயலால் கடும் நிலச்சரிவு: 38 பேர் பலியான சோகம் Posted on 08-Aug-2016 மெக்சிகோவில் வெப்பமண்டல புயலால் கடும் நிலச்சரிவு: 38 பேர் பலியான சோகம்

மெக்சிகோ:
மெக்சிகோ நாட்டில், ஏல் என்ற வெப்பமண்டல புயல் கடந்த சனிக்கிழமை தாக்கியதையடுத்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


மத்திய புயப்லா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மலையடிவாரத்தில் உள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் 15 சிறுவர்கள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்தனர். இதேபோல், கிழக்கு மாநிலமான வெராகுரூசில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியானதாக மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.

ஹாச்சினாகோ நகரில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழையானது 24 மணி நேரத்திற்குள் கொட்டித் தீர்த்துள்ளதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புயப்லாவில் பெய்து வரும் கனமழையால் சுமார் 200 மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில்  தங்க வைக்கப்பட்டனர்.

Label