OUR CLIENTS
‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா? கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து
‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா? கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து Posted on 08-Jun-2017 ‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா? கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து

சென்னை, ஜூன் 8-
தமிழக அரசு சார்பில், கேபிள் ஒளிபரப்புக்கான, ‘செட் - டாப் பாக்ஸ்’ கொள்முதல், ‘டெண்டரில்’ யாரும் பங்கேற்காததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கேபிள், ‘டிவி’ சேவை வழங்கி வரும், அரசு கேபிள் நிறு வனம், சாதாரண வழியிலான, ‘அனலாக்‘ முறையில், ஒளிபரப்பை வழங்கி வருகிறது. 

நாடு முழுவதும், ‘டிஜிட்டல்’ அடிப்படையில், அதாவது, ‘செட் - டாப் பாக்ஸ்’ மூலமாக, கேபிள் நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ உத்தரவிட்டுள்ளது. அரசு கேபிள், ‘டிவி’க்கு, அதற்கான உரிமத்தை, ஏப்ரல் மாதம் வழங்கியது. ஆனால், மூன்று மாதத்திற்குள், அதை அமல்படுத்தாவிட்டால், உரிமம் ரத்தாகும் என, நிபந்தனை யும் விதித்தது. அதைத் தொடர்ந்து, 70 லட்சம், செட் - டாப் பாக்ஸ்களை, கொள்முதல் செய்து, இலவசமாக வழங்க, அரசு கேபிள் நிறுவனம் முடிவெடுத்தது; அதற்காக, மே, 6ல் டெண்டர் கோரியது. கடைசி தேதி, மே, 29 என, நிர்ணயிக்கப்பட்டது. 

ஆனால், கடைசி நாள் வரை, எதிர்பார்த்த அளவில் விண்ணப்பங்கள் வராததால், டெண்டர் ரத்து செய்யப்பட்டு, அதற்கான கெடு, 
ஜூன், 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது: டெண்டரில் பங்கேற்க முன்வந்த சில நிறுவனங்களை, அரசியல்வாதிகள் சிலர் தொடர்பு கொண்டு, கமிஷன் கேட்டதாகத் தெரிகிறது. அதனால், அந்த நிறுவனங்கள், டெண்டரில் பங்கேற்க தயக்கம் காட்டுகின்றன. எனவே, அவர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிப்பதற்காக, டெண்டர் கெடு, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள, டிஜிட்டல் ஒளிபரப்பிற்கான உரிமம், ஜூலை, 17 வரை மட்டும் செல்லுபடியாகும். அதற்குள், ‘செட் - டாப் பாக்ஸ்’ கொள்முதல் செய்து, டிஜிட்டல் ஒளிபரப்பை துவங்காவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என, ‘டிராய்’ எச்சரித்துள்ளது. ஆனால், டெண்டர் நடைமுறைகள் முடிவதற்கே, ஜூன் இறுதியாகி விடும். எனவே, ‘செட் டாப் பாக்ஸ்’ கொள்முதல் பணிகள், ஜூலை, 17க்குள் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Label