OUR CLIENTS
ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு!
ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு! Posted on 08-Jun-2017 ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு!

சென்னை, ஜூன் 8-
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், தற்போது இடைத்தேர்தல் நடத்தும் சூழல் இல்லை’ என, மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் அறிக்கை அனுப்பி உள்ளது.

 ஜெயலலிதா மறைவு காரணமாக, சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி, 2016 டிச., 5 முதல், காலியாக உள்ளது. அங்கு, ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். எனவே, மார்ச், 16ல், இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது; ஏப்., 12ல், ஓட்டுப்பதிவு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வாக்காளர்களை கவர, ஏராளமான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சிகளால் வழங்கப்பட்டன.

 இதன் காரணமாக, ஏப்., 9ல், தேர்தலை ரத்து செய்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன்பின், நேர்மையான முறையில், சுதந்திரமாக தேர்தல் நடத்த முடியுமா என, தேர்தல் கமிஷன் கண்காணித்தது.ஆனால், அதற்கான சூழல் இன்னமும் ஏற்படவில்லை. ஆறு மாதங்களுக்குள், தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், ஜூன், 4ம் தேதியுடன், ஆறு மாதம் நிறைவு பெறுகிறது.இந்த சூழ்நிலையில், இடைத்தேர்தல் நடத்துவதற்கான காலத்தை நீட்டிக்கும்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அறிக்கை அளித்துள்ளார். 

அதை பரிசீலனை செய்த தேர்தல் கமிஷன், தற்போதைய சூழலில், ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தல் நடத்த முடியாது என, கருதுகிறது. நேர்மையான முறையில், தேர்தல் நடத்துவதற்கான சூழல் வரும் போது, அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label