OUR CLIENTS
காரைக்கால் அரசு மருத்துவமனையில் மருந்துகள் போதிய இருப்பு இல்லை அசனா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு!
காரைக்கால் அரசு மருத்துவமனையில் மருந்துகள் போதிய இருப்பு இல்லை அசனா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு! Posted on 08-Jun-2017 காரைக்கால் அரசு மருத்துவமனையில் மருந்துகள் போதிய இருப்பு இல்லை அசனா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு!

புதுச்சேரி, ஜூன் 8
காரைக்கால் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பு இல்லாத நிலை உள்ளது என அதிமுக எம்.எல்.ஏ. அசனா கூறினார்.

 புதுச்சேரி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

 அன்பழகன்: குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்ட எவ்வளவு மானியம் தரப்படுகிறது?
 3 ஆண்டுகளில் எவ்வளவு பேர் விண்ணப்பித்தனர்? முதல் தவணை நிதி ஒருவருக்குக் கூட தரவில்லை. 2, 3-ஆவது தவணை தான் தரப்பட்டுள்ளது. 
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இணைத்துள்ளனர். மத்திய அரசு ரூ.1.5 லட்சம் தருகிறது. மாநில அரசு எவ்வளவு தரும்.

 சிவா: கடந்த ஆண்டில் குறைவான நிதி பெற்றவர்களுக்கு கூடுதல் நிதி கிடைக்குமா?

 முதல்வர்: கல்வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஆதாரத்தை பொறுத்து அரசு முடிவெடுக்கும். 3818 வீடுகளுக்கு ஒப்புதல் வந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி தரப்படும். 
அமைச்சரவையில் வைத்து முடிவெடுக்கப்படும்.

 அசனா: காரைக்கால் அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட மருந்துகள் இருப்பு இல்லை. பொதுவான மருந்துகளும் இல்லை.

 அன்பழகன்: அரசு மருத்துவமனையில் முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணர் இல்லை. 15 நாள்களுக்கு ஒருமுறை தான் செல்கின்றனர்.
 பாகூர் தனவேல்: கிராமப்புறங்களில் வந்து மருத்துவர்கள் தங்குவதில்லை.

 முதல்வர்: காரைக்கால் அரசு மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனையோடு இணைந்து செயல்படுகிறது. உயிர்காக்கும் 
மருந்துகள், நீரிழிவு வியாதிக்கான மருந்துகள் அனைத்தும் தேவையானவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களை புதுவைக்கு அனுப்பி வருகிறோம். வாரத்துக்கு 2 நாள்கள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செல்கின்றனர். 3 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் மதியம் 2 மணி வரை மருத்துவர்கள் உள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் செய்த ஒப்பந்தத்தின்படி மாலையில் 2 மணி முதல் 8 மணி வரை மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்.

Label