OUR CLIENTS
சீதாராம் யெச்சூரி மீது இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல்!
சீதாராம் யெச்சூரி மீது இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல்! Posted on 08-Jun-2017 சீதாராம் யெச்சூரி மீது இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல்!

புதுடெல்லி, ஜுன் 8
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சில இளைஞர்களால் தாக்கப்பட்டார். அவர்கள் இந்துத்துவா ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. 

டெல்லியில் நேற்று விவசாயிகள் பிரச்சினை குறித்து பேட்டியளிப்பதாக யெச்சூரி கூறியிருந்தார். இதையடுத்து பத்திரிகையாளர்கள் குழுமியிருந்தனர். அவர் பிரஸ் மீட்டுக்கு வர விருந்த நிலையில், யெச்சூரியை சுமார் 3 இளைஞர்கள் சூழ்ந்து தாக்க முற்பட்டனர்.

உடனே அங்கிருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள், அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி, அடி, உதை கொடுத்தனர். இதன்பிறகு அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் யெச்சூரி காயமின்றி தப்பினார். இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களால் யெச்சூரி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஏனெனில், யெச்சூரியை தாக்க முயன்றபோது, அவர்கள் இந்துத்துவா முழக்கங்களை எழுப்பியதாக அருகே இருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Label