OUR CLIENTS
வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றுடன் வெளியேற்றம்
வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றுடன் வெளியேற்றம் Posted on 08-Aug-2016 வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றுடன் வெளியேற்றம்

 ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

ஒலிம்பிக் டென்னிசில் ஒற்றையர் பிரிவில் 5-வது முறையாக பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற மகத்தான பெருமையுடன் களம் புகுந்த வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 3-6, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் 3 மணி 13 நிமிடங்கள் போராடி கிர்ஸ்டன் பிளிப்கென்சிடம் (பெல்ஜியம்) வீழ்ந்தார். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றரான வீனஸ் வில்லியம்ஸ், ஒலிம்பிக்கில் முதல் சுற்றுடன் விரட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். மற்றொரு முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செர்பியாவின் இவானோவிச்சும் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்.

Label