OUR CLIENTS
சவுதியில் அரசின் அறிவிப்பை மீறிய இளம்பெண் கைது
சவுதியில் அரசின் அறிவிப்பை மீறிய இளம்பெண் கைது Posted on 08-Jun-2017 சவுதியில் அரசின் அறிவிப்பை மீறிய இளம்பெண் கைது

சவுதி, ஜூன் 8
சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்ற தடையை மீறிய பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவை சேர்ந்தவர்  Loujain al-Hath-loul (27), இளம்பெண்ணான இவர் சமூக ஆர்வலராக இருந்து பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்ற விடயத்தை மீறி செயல்பட்டதற்காக Loujain இரு தினங்களுக்கு முன்னர்King Fahd சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Loujian கைதான பின்னர், காவலில் வைக்க அழைத்து செல்லப்பட்டாரா என்ற விவரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.மேலும்,Loujian  தனது வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மனித உரிமைகள் குழுவானAmnesty International சார்பில் பேசிய Hadid,Loujian தொடர்ந்து துன்புறுத்தப்படுவது நியாயமில்லாத ஒன்று.
அதனால் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையில், Loujain நேற்று சவுதியின் தலைநகரான Riyadh அழைத்து செல்லப்படுவார் என நம்பப்படுகிறது.

மேலும்Hadid கூறுகையில், பெண்கள் உரிமைக்காக Loujain  மீண்டும் குரல் கொடுத்துள்ளதால் போலீசாரால் அவர் குறிவைக்கப்பட்டுள்ளார்.
Loujainவை  கைது செய்ததன் மூலம் சமத்துவம் மற்றும் கருத்துரிமை விடயங்களுக்கு எதிராக அரசு மீண்டும் செயல்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
Loujain ஏற்கனவே கடந்த 2014ல் தடையை மீறி கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டிருந்தார். அவருடன் பிரபல எழுத்தாளர் Maysaa Alamoud  என்பவரும் கார் ஓட்டியதாக அப்போது கைது செய்யப்பட்டார்.

சவுதியில் ஆண்களுக்கு மட்டுமே வாகனத்தை இயக்க ஓட்டுனர் உரிமை வழங்கப்படுகிறது.  பெண்கள் வாகனம் ஓட்டும் போது அதிகாரிகளிடம் சிக்கினால் அவர்கள் மீது அபராதம் மற்றும் கைது நடவடிக்கை பாயும் என்பது குறிப்பிடத்தக்கது

Label