தேவாலயத்தை சூறையாடும் ஐ.எஸ் தீவிரவாதிகள் Posted on 08-Jun-2017
பிலிப்பைன்ஸ், ஜூன் 8
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தை தீவிரவாதிகள் சூறையாடும் வீடியோவை ஐ.எஸ்.தீவிரவாத ஆதரவு அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸில் இராணுவத்திற்கும், ஐ.எஸ்.ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதுவரை 120 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில் மராவி நகருக்காக கடும் வன்முறை நிலவிவருகிறது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றை தீவிரவாதிகள் அடித்து நொறுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் தேவாலயத்தின் உள்ளே இருக்கும் சிலைகள் மற்றும் கண்ணாடி பொருட்கள் போன்றவைகளை அடித்து நொறுகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவு பெற்ற அமெக் செய்தி நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.