OUR CLIENTS
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கால் இறுதி ஆட்டங்கள் மழையால் பாதிப்பு
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கால் இறுதி ஆட்டங்கள் மழையால் பாதிப்பு Posted on 08-Jun-2017 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கால் இறுதி ஆட்டங்கள் மழையால் பாதிப்பு

பாரீஸ், ஜூன் 8-
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில்  நடக்க இருந்த கால்இறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டது.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.இதில் 10-வது நாளான நேற்று முன்தினம் கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), 19 வயதான லாத்வியா வீராங்கனை ஜெலீனா ஒஸ்டாபென்கோவை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 2-5 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பலத்த மழை கொட்டியதால் இந்திய நேரப்படி இரவு 10 மணி வரை ஆட்டம் மீண்டும் தொடங்கவில்லை.மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீராங்கனை டிமா பாசின்ஸ்கி, பிரான்ஸ் வீராங்கனை கிறிஸ்டினா மாடெனோவிச்சை எதிர்கொண்டார். 

இதில் டிமா பாசின்ஸ்கி 6-4, 1-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.இதனை அடுத்து ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா)-டோமினிச் திம் (ஆஸ்திரியா), ரபெல் நடால் (ஸ்பெயின்)-பாப்லோ கார்னோ புஸ்டா (ஸ்பெயின்) ஆகியோர் மோத இருந்தனர். மழை காரணமாக இந்த ஆட்டங்கள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

Label