OUR CLIENTS
நோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம்!
நோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம்! Posted on 12-Jun-2017 நோய் தாக்கி இறந்த கோழிகளை  ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம்!

வேலூர், ஜூன் 12-
வேலூரில் நோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. இதனால் பல நோய்கள் மறைமுகமாக பரவுகிறது.  

வேலூர் வளர்ந்து வரும் மாநகராகும். வேலூர் ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வேலூர் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால் மாநகராட்சிக்கு உண்டான எந்தவித அடிப்படை வசதிகளும் இதுநாள் வரை வந்தபாடில்லை. இந்நிலையில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஓட்டல்களில் மதிய உணவு சைவ சாப்பாடு ரூ.100க்கு விற்பனையாகிறது. இதேபோன்று அசைவபிரியர்களுக்கு சிக்கன் பிரியாணி ரூ.110க்கும், மட்டன் பிரியாணி ரூ.150க்கும் விற்பனையாகிறது. இப்படி அசைவபிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகள் கடுமையான விலை உயர்வு அடைந்துள்ளன. இந்நிலையில் நிலைமையை சமாளிக்கவும், அசைவபிரியர்களிடம் இருந்து பணம் கறக்கவும் சில பிரபல ஓட்டல்களில் கோழிப்பண்ணைகளில் இறந்து போகும் கோழிகளை அது நாட்டுக் கோழியாக இருந்தாலும் சரி, பிராய்லர் கோழியாக இருந்தாலும் சரி குறைவான விலை கொடுத்து வாங்கி வந்து அதை உடனடியாக சுத்தம் செய்து குளிர்பதன பெட்டிகளில் வைத்து அடைத்து விடுகின்றனர். இதனால் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். 

இதுவே முதலில் ஆரம்பிக்கும் போது நம்மவீடு வந்து சாப்பிடுங்கள், வயிற்றுக்கு ஏதும் தீங்கு ஏற்படாது, வீட்டு முறை சமையல் என்றெல்லாம் தாஜா செய்து வாடிக்கையாளர்களை மெல்ல மெல்ல ஓட்டலுக்கு இழுக்கின்றனர் ஓட்டல் உரிமையாளர்கள். அத்துடன் கடந்த 10 நாட்களாக Ôபறவைக் காய்ச்சல்Õ மெல்ல மெல்ல தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. பல கோழிகள் கோழிப்பண்ணையில் இறந்து விடுகின்றன. இவற்றை குறைவான விலை கொடுத்து ஓட்டல் உரிமையாளர்கள் வாங்கி வருகின்றனர். வேலூரில் கோழி இறைச்சி உரித்த கறி கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது.  இதே காட்பாடி பகுதியில் கோழி இறைச்சி பிராய்லர் உரித்தது கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து கொண்டு வரப்படும் கோழி இறைச்சி தலா கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை காட்பாடி பகுதியில் விற்பனையாகிறது. இதையும் சிலர் கேட்காமல் வாங்கிக் கொள்கின்றனர். 

சில ஓட்டல் உரிமையாளர்கள் இவர்களிடம்தான் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு கோழி இறைச்சி படும் பாட்டைச் சொல்லி மாளாது. இதையே சில ஓட்டல்களில் கோழி இறைச்சியை வைத்து மாலை வேளையில் பகோடா போட்டு விற்பனை செய்கின்றனர். அந்த எண்ணெய்யை பார்த்தால் தார் போன்று கருப்பாக இருக்கிறது. அது மேலேயே எண்ணெய் ஊற்றி பகோடா போடப்படுகிறது. பிரபல ஓட்டல்களில் பயன்படுத்திய எண்ணெய் என்றும், அதை ரூ.10க்கு லிட்டர் என விலைக்கு வாங்கி வந்து சிறிய கடை வைத்துள்ளோர் பயன்படுத்துகின்றனர். பெரிய ஓட்டல்களில் சமையலறையில் நடப்பதை பார்த்தால் நாம் சாப்பிட முடியாத அளவுக்கு சிரமங்கள் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். அசைவப்பிரியர்கள் அசைவு உணவுகளை சாப்பிட்டு விட்டுச் சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு வயிற்று உபாதை கடுமையாக ஏற்படும் நிலை உள்ளது அவர்களே உணரும்போதுதான் உண்மை தெரியும். கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வயிறு தொடர்பான பல நோய்கள் இந்த இறந்த கோழி இறைச்சி உண்பதால் ஏற்படும் என்பது பலருக்கு தெரியாது.

 இதுஒருபுறம் என்றால் இப்போது பறவைக் காய்ச்சல் ஏற்பட்ட கோழி இறைச்சிகளை சமைத்து பரிமாறி வருகின்றனர் பிரபல ஓட்டல்களில். அத்துடன் மட்டனுடன் சில பிரபல ஓட்டல்களில் மாட்டிறைச்சியை கலப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு கேட்டால் அப்படியெல்லாம் எங்கள் ஓட்டலில் எதுவும் கலப்படம் இல்லை. சுத்தமான ஆட்டிறைச்சிதான் சமைத்து தருகிறோம் என்று கூலாக தெரிவிக்கின்றனர். இப்படி தொழில் ரகசியம் ஓட்டல்களில் காக்கப்படுகிறது. இப்படி பணத்தை கொடுத்து விட்டு சூனியம் வைத்து கொண்ட கதைதான் நம்ம வேலூரில் நடக்குது என்று சொன்னால் அது மிகையாகாது. பிரபல ஓட்டல்களில் இப்படி ஏதாவது கோளாறு ஏற்படுத்தி விட்டு சாப்பிட ஓட்டலுக்குச் செல்வோரை நோய் பீடிக்கச் செய்து விடுகிறார்கள். பலருக்கு அப்பன்டிக்ஸ் எனப்படும் குடல் நோய் இதனால் ஏற்படும் அதிக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி இந்த ஓட்டல்களுக்கு சென்றால் வாகனங்களை நிறுத்த சரியான பார்க்கிங் வசதி செய்து தருவதில்லை. மாறாக சாலையில் வாகனங்களை நிறுத்திச் செல்ல வேண்டிய பரிதாபநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் போக்குவரத்து ஒருபுறம் பாதிக்கப்படுகிறது. 

ஆனால் இதைப் பார்த்தும் போலீசார் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் பணி முடிந்து வீடு திரும்பும் போலீசார் தங்களது குடும்பத்துக்கு தேவைக்கான அசைவ உணவுகளை இதுபோன்ற ஓட்டல்களில்தான் மூட்டை கட்டிக் கொண்டு செல்கிறார்கள் என்று ஒரு புறம் பரவலாக பேசப்படுகிறது. இதனால் எதைப்பற்றியும் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் கடமையாற்றும் போலீசார். இதனால் அசைவப் பிரியர்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபடும் ஓட்டல் உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு அலுவலர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளிர்பதன பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள நாட்பட்ட கோழி உள்ளிட்ட இறைச்சிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

அன்றைய கோழிகளை உயிருடன் சமையல் செய்ய பயன்படுத்த வேண்டும். பறவைக்காய்ச்சல் பரவிய பறவைகளை வேலூர் பகுதியில் உள்ள அசைவ பிரியர்கள் உண்டு வருவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே 'காலச்சக்கரம்' நாளிதழின் கோரிக்கையாகும். ஓட்டல்களில் சாப்பிட போவதற்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பிறகுதான் அந்த ஓட்டலையே தேர்வு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதுபோன்ற விஷயங்களில் அலட்சியம் காட்டாமல் ஓட்டல்களில் ஆய்வு செய்ய உணவு கட்டுப்பாட்டு அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் பெண்களின் ஓட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்.....

Label