OUR CLIENTS
சென்னை மூலக்கடை முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை!
சென்னை மூலக்கடை முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை! Posted on 12-Jun-2017 சென்னை மூலக்கடை முகல் பிரியாணி  ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை!

சென்னை, ஜூன் 12-
சென்னை மூலக்கடையில் உள்ள முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே திறந்தவெளி கழிவறை செயல்படுகிறது.  

சென்னை மூலக்கடையில் முகல் பிரியாணி என்று அசைவ பிரியர்களுக்கு இந்த ஓட்டல் செயல்படுகிறது. இந்தியன், சைனீஸ், தந்தூரி உள்ளிட்ட உணவு வகைகள் தாராளமாக கிடைக்கிறது. இந்த ஓட்டலில் விலையோ தாறுமாறாக விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் யாரையும் பாதித்தாக தெரியவில்லை.  ஆனால் அந்த ஓட்டல் அமைந்துள்ள இடத்தை ஒட்டினாற்போல திறந்தவெளி கழிவறை ஒன்றும் உள்ளது. இதனால் இங்கு பறக்கும் ஈ, கெசுக்கள் ஒட்டலில் அடிக்கடி படையெடுக்கின்றன. உணவுபண்டங்கள் மீது வந்து உட்காரச் செய்கின்றன. இதை ஓட்டல் உரிமையாளர் கண்டும் காணாமல் விட்டுவிட்டார். ஆனால் சாப்பிடச் செல்பவர்களும் பலர் இதை உன்னிப்பாக கவனிப்பது இல்லை. பழைய நாட்பட்ட இறைச்சிகளை குளிர்பதன பெட்டியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். 

இதனால் தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இதைப்பற்றி ஓட்டல் உரிமையாளர் கவலைப்படுவதாக இல்லை. மாறாக யாரோ வந்து சாப்பிட்டு விட்டு பணம் கொடுத்து விட்டு நோயை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள் என்று நமக்கென்ன கவலை என்று பொறுப்பை தட்டிக் கழித்து விடுகிறார் இந்த கடை :உரிமையாளர் என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சென்னை மாநகரில் இதுபோன்ற சுத்தம் சுகாதாரம் இல்லாமல் பல உணவகங்கள் செயல்படுகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இதற்கு காரணமே அலட்சியப் போக்குதான் என்று சொல்ல வேண்டும். உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் ஓட்டல்களை கண்காணிப்பது இல்லை. அங்கு சுத்தமாக உணவு பரிமாறப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். 

இதுபோன்ற உருப்படியான பணிகள் எதையும் பார்க்காமல் தனது பாக்கெட் நிரம்புகிறதா? என்பதிலேயே குறியாக உள்ளனர். இதனால் அப்பாவி பொதுமக்கள் இதுபோன்ற சுகாதாரமில்லாத ஓட்டல்களில் சாப்பிட்டு விட்டு பல்வேறு உபாதைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த ஓட்டல்களில் சாப்பிட்டதற்கு மருத்துவ செலவு வேறு செய்ய வேண்டியுள்ளது அந்த நுகர்வோர். இது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் கழிவறைக்கு பக்கத்தில் ஓட்டல் நடத்த தனி தில் வேண்டும். யார் வந்து என்ன செய்துவிட முடியும் என்று விலைமதிப்பில்லாத மனிதஉயிர்களுடன் விளையாடுகிறார்கள் இதுபோன்ற ஓட்டல் உரிமையாளர்கள். 

உணவு கட்டுப்பாட்டு அலுவலர் தனது பாக்கெட்டை நிரப்புவதை விட்டு விட்டு மக்களைப் பற்றியும் அவர்களது நலனிலும் சற்று அக்கரை காட்ட முயற்சி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், இந்தப்பகுதி வாழ் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கழிவறை பக்கத்தில் ஓட்டல் வைத்து நடத்த அனுமதி கொடுத்த அரசு அலுவலர் யார்? அவர் மீது துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் ஒருபுறம் கழிவறை திறந்தே இருப்பதால் பெண்கள் இந்தபக்கம் திரும்பி கூட பார்க்க முடியாத அசௌகரியத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது. ஒன்று இந்த ஓட்டலை இழுத்து மூட வேண்டும். இல்லையேல் கழிவறையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி நிர்வாகம்தான் முடிவு எடுக்க வேண்டும். என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label