OUR CLIENTS
இன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி!
இன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி! Posted on 12-Jun-2017 இன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி!

சேலம், ஜூன் 12-
ஒரே இடத்தில், பல ஆண்டுகளாக பணியாற்றி, புகாரில் சிக்கியுள்ள இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்களை மாற்ற, உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழக போலீசில், நான்கு மண்டலங்கள், 12 சரகங்கள், ஆறு மாநகர கமிஷனர் அலுவலகங்கள், ரயில்வே உள்பட, 33 மாவட்ட எஸ்.பி.,க்கள், 244 சப் - டிவிஷன்கள் கட்டுப்பாட்டில், போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன. அதில், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள், தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, ஒரே மண்டலம், சரகம், மாவட்டங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். இதுபோன்ற அதிகாரிகளால், பல நேரங்களில் சட்டம் ஒழுங்கு பாதிப்பை தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், பல ஆண்டுகளாக ஒரே பிரிவில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்களை, மண்டலம், சரகம், மாவட்டங்களுக்கு இடையில் மாற்ற முடிவு செய்து, பட்டியல் தயாராகிறது. 

அதில், 400 டி.எஸ்.பி.,க்கள், 800 இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றுள்ளனர். இதுவரை பணிபுரியாத இடங்களை தேர்வு செய்து, அவர்களை மாற்ற, உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது, பல ஆண்டுகளாக, ஒரே இடத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.பி., ஒருவர் கூறியதாவது: மக்கள் இடையே நல்ல மதிப்பை ஏற்படுத்த, புகாரில் சிக்கி, ஒரே மாவட்டம், மண்டலம், சரகம், சிறப்பு பிரிவுகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் போலீசார், ஏட்டுகள், எஸ்.ஐ.ஐ.,.க்கள் பணி மாற்றப்பட்டனர். அடுத்து, இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்களை பணி மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறவிப்பு, விரைவில் வெளியாகும். இதை, டி.ஜி.பி., ராஜேந்திரனே நேரடியாக மேற்கொள்வதால், அரசியல், அதிகாரிகள் பலம் கொண்ட இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள், பீதியடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Label