OUR CLIENTS
வெள்ளை மாளிகையில் குடியேறும் டிரம்பின் குடும்பம்
வெள்ளை மாளிகையில் குடியேறும் டிரம்பின் குடும்பம் Posted on 12-Jun-2017 வெள்ளை மாளிகையில் குடியேறும் டிரம்பின் குடும்பம்

வாஷிங்டன், ஜூன் 12-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடும்பம் வரும் புதன் கிழமையன்று வெள்ளை மாளிகைக்கு குடிபெயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டொனால்ட் டிரம்பின் மூன்றாவது மனைவியான மெலனியா (melania), மற்றும் குழந்தை பாரன் டிரம்ப் (barron trump) ஆகியோர் நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். பொதுவாக அமெரிக்காவில் அதிபர் குடும்பம் உடனடியாக வெள்ளை மாளிகையில் உள்ள எக்சிகியூடிவ் ரெசிடன்ஸ் (executive residence) எனப்படும் நிர்வாக குடியிருப்பில் குடியேறுவது வழக்கம். ஆனால் பாரனின் பள்ளிப் படிப்பு காரணமாக டிரப்பின் குடும்பம் வெள்ளை மாளிகையில் குடியேறுவது தாமதம் ஆனது.

தற்போது பாரனின் படிப்பு முடிந்து விட்டதால் இந்த வாரத்தில் வெள்ளை மாளிகையில் குடியேற மெலனியா முடிவு செய்திருப்பதாகவும், டிரம்பின் பிறந்தநாளான 14ஆம் தேதி குடியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Label