OUR CLIENTS
தாக்குதல் நடத்தப்போவதாக சவுதி அரேபியாவிற்கு மிரட்டல் விடுத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்
தாக்குதல் நடத்தப்போவதாக சவுதி அரேபியாவிற்கு மிரட்டல் விடுத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் Posted on 12-Jun-2017 தாக்குதல் நடத்தப்போவதாக  சவுதி அரேபியாவிற்கு மிரட்டல் விடுத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

 துபாய், ஜுன் 12-
ஈரானைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமையன்று தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கொமேனி நினைவிடத்திலும் தாக்குதல் நடதத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் சுமார் 17 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அத்துடன், ஈரானில் உள்ள ஷியா பிரிவினர் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என மிரட்டியுள்ளனர். இதன்மூலம் ஈரானில் முதல் முறையாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதேபோன்று சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ். அமைப்பு மிரட்டல் விடுத்திருக்கிறது. சமீபத்தில் வெளியாகி உள்ள ஒரு வீடியோவில், முகத்தை மறைத்தபடி பேசும் 5 தீவிரவாதிகள், ஈரானில் உள்ள ஷியா பிரிவினருக்கும், சவுதி அரேபியா அரசாங்கத்திற்கும் மிரட்டல் விடுத்துள்ளனர். ‘ஈரானில் முதல் முறையாக தாக்குதல் நடத்தப்படும். ஈரானைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்துவோம்’ என கூறியுள்ளனர்.  

சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் தகவல்களைத் தேடும் அமைப்பான சைட் புலனாய்வுக்குழு இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. மேலும், இந்த வீடியோ ஈரான் தாக்குதலுக்கு முன்னதாக பதிவு செய்யப்பட்டிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

  சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை முறித்துக்கொண்டதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் சவுதியில் தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ். அமைப்பு கூறியிருப்பதால் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Label