OUR CLIENTS
தாய்லாந்தில் அரச குடும்பத்தை அவமதித்தவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை ஐ.நா. சபை கடும் கண்டனம்
தாய்லாந்தில் அரச குடும்பத்தை அவமதித்தவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை ஐ.நா. சபை கடும் கண்டனம் Posted on 12-Jun-2017 தாய்லாந்தில் அரச குடும்பத்தை அவமதித்தவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை ஐ.நா. சபை கடும் கண்டனம்

பாங்காக், ஜூன் 12-
தாய்லாந்தில் அரச குடும்பத்தை அவமதித்தவருக்கு 35 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தாய்லாந்தின் இத்தகைய நடவடிக்கைக்கு ஐ.நா. சபை கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் அரச குடும்பத்தை அவமதிப்பது பெரும் குற்றமாக கருதப்படுகிறது. அக்குற்றம் புரிவோருக்கு ராணுவ கோர்ட்டு கடும் தண்டனை விதித்து வருகிறது. இந்த நிலையில் விசாய் என்ற 34 வயது வாலிபர் மன்னர் குடும்பத்தை பற்றி அவதூறான கருத்துக்களை ‘பேஸ்புக்‘ சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். அதில் தனது போட்டோ மற்றும் வீடியோவையும் பதிவு செய்து இருந்தார்.  அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 மேலும் அரச குடும்பத்தை இழிவு செய்ததாக கூறி அவர் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 10 பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டுகள் வீதம் 70 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது. அவர் மன்னிப்பு கோரியதால் தண்டனை பாதியாக குறைக்கப்பட்டது. 

அதாவது 35 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.  தாய்லாந்தில் கடந்த 2014-ம் ஆண்டு புரட்சி மூலம் ராணுவம் ஆட்சியை பிடித்தது. அரச குடும்பத்தை அவமதித்ததாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டி கடும் தண்டனை வழங்கி வருகிறது. தாய்லாந்தின் இத்தகைய நடவடிக்கைக்கு ஐ.நா. சபை கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. இச்சட்டத்தை பயன்படுத்தி மனிதாபிமானத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என எச்சரித்துள்ளது.

Label