OUR CLIENTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள்! கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள்! கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்! Posted on 13-Jun-2017 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள்! கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்!

கிருஷ்ணகிரி, ஜூன் 13-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் சில பஞ்சாயத்து செயலர்கள் பொதுமக்களை மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் என்றாலே கிரானைட் தொழிலில் சிறப்பாக வளர்ச்சி பெற்று வரும் மாவட்டமாக உள்ளது. பணப்புழக்கம் தாராளமாக உள்ளதாகவும் மாவட்ட மக்களால் கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து செயலர்கள் பொதுமக்களை உருட்டி மிரட்டி பணத்தை பறிப்பதாக பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மகாராஜாகடை, எம்சி பள்ளி, போத்திநாயனப்பள்ளி ஆகிய பஞ்சாயத்துகளில் இருக்கும் செயலர்கள் பணம் சம்பாதிக்கும் விதமே வேறு. ஏற்கனவே சிவமணி என்பவர் பஞ்சாயத்து செயலராக உள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து இங்கு வந்து குறுக்கு வழியில் அரசை ஏமாற்றி வேலை வாங்கியுள்ளது குறித்து அண்மையில் விரிவாக செய்தி வெளியானது. 

ஆனால் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அந்தப்பகுதி மக்கள் புகார் மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதுபோன்ற புகார்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர் நூறு நாள் திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கிறார் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் மனு சென்றும் அதை குப்பைக்கு அனுப்பியுள்ளனர் சில கருப்பு ஆடுகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஊர்மக்களின் பணத்தை ஏமாற்றி நிலம், கார், பங்களா வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் மாமூல் தராதவர்களை பணியில் சேர்க்காமல் இழுத்தடிப்பது என்று கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருகிறார் சிவமணி என்று பலருக்கு தெரியாது. 

இவருக்கு பின்புலமாக பல அரசு அலுவலர்கள் செயல்படுவது தெரியவந்துள்ளது. இதுபோன்று மாவட்டத்தில் உள்ள பல 
பஞ். செயலர்களை துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் அமைதி காப்பதால் எவ்வித நன்மையும் ஏற்படாது. களைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமன்றி அரசு ஒதுக்கீடு செய்யும் கழிவறைகளிலும் ஊழல்  நடந்து வருகிறது.  மக்களுக்கு எந்தவித நன்மையும் இவர்களால் ஏற்படவில்லை. இதுபோன்ற பஞ்சாயத்து செயலர்கள்  வைத்துள்ள சொத்துக்கள் எவ்வளவு? இது எப்படி  வந்தது என்று  விவரங்களை சமர்ப்பிக்க அரசும் , மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட வேண்டும். வட்டா ர வளர்ச்சி அலுவலர்களுக்கு சம்திங் கொடுத்து விட்டு ஒன்றும் தெரியாதவர் போல இருந்து கொள்கின்றனர் இந்த பஞ். செயலர்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வரும் கொள்ளைக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஒரு நிரந்தர முடிவு கட்ட வேண்டும். இதற்காகத்தான் ஆட்சியரை அரசு நியமித்துள்ளது.  

ஆட்சியர் அதிரடி நடவடிக்கை  பஞ்.செயலர்கள் மீது திரும்புமேயானால் மாவட்டமும், மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும்  சுபிட்சமாக இருப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மாவட்ட ஆட்சியர் கதிரவனின் அதிரடி நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Label