OUR CLIENTS
புரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்!
புரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்! Posted on 14-Jun-2017 புரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி  விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்!

வேலூர், ஜூன் 14-
வேலூர் மாவட்டத்தில் சில நாட்களாக மாநகராட்சி அலுவலகம் தனியார் அலுவலகம் போலத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 

நேரடியாக எந்த வேலைகளையும் முடிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் வாயிலாகத்தான் பணிகளை செய்யமுடியும் என்ற அளவுக்கு மாறிக்கொண்டு வருகிறது என பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுபோன்ற இழிவான செயல்களைக் கண்டு ஏன் மாநகராட்சி ஆணையர் குமார் கண்டுகொள்ளாமல் அமைதியாக உள்ளார் என்பது புரியாத புதிராக உள்ளது. வேலூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வெளியே உள்ள இடைத்தரகர்கள் என்னும் பெயரில் உலா வரும் மாஃபியா கும்பலின் அடாவடி அட்டகாசத்துக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

 அங்கு பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு வருபவர்களிடம் மிக முக்கியமாக பெண்களிடம் அவர்களின் குடும்பச் சூழலையும், குடும்பப் பின்னணியையும் அறிந்து கொண்டு முக்கியமாக (விதவை) அவர்களிடம் தங்களின் இச்சைகளுக்கு ஏற்றவாறு அவர்களை வசம் செய்துகொண்டு அவர்களின் தாலி கட்டாத கணவனாக வாழுவது அண்மையில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் வேலை கேட்டு வருபவர்களை இவர்களுக்கு தேவையானவர்களுக்கு இணக்கம் செய்வதும் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை இவர்கள் தீய வழிகளில் உபயோகப்படுத்துவதுமாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 அதுமட்டும் இன்றி எனக்கு அங்கே ஆட்கள் உள்ளனர், இங்கே ஆட்கள் உள்ளனர் என கப்சா விட்டுக்கொண்டு வருபவர்கள் இடத்தில் வசூல் செய்து கொண்டுள்ளனர்.இதற்கு மகாபாரதத்தில் இறுதிவரை போரை தலைமை வகித்து நடத்தியவரின் பெயரை கொண்டவர்தான் இதற்கும் துணையாக உள்ளார் என்று அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் விசாரணை மேற்கொண்டு பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

Label