OUR CLIENTS
தருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்!
தருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்! Posted on 14-Jun-2017 தருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்!

தருமபுரி, ஜூன் 14-
தருமபுரி மாவட்டத்தில் மதுபானங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுபெற்றாலும் கலால் போலிஸார் தாராளமாக கல்லாகட்டுவதால் கள்ளச்சரக்கு விற்பனை 24 மணி நேரமும் அமோகமாக நடந்துவருகிறது. மாமூல் என்றாலே தனி ஆர்வத்துடன் போலீஸார் பணியாற்றுகின்றனர்.

கடந்த, 2003ல் தமிழகத்தில் தனியார் வசமிருந்த மதுமான கடைகளை அதிமுக ஆட்சியில் அரசு டாஸ்மாக் கடைகளாக உருவாக்கப்பட்டது. மேலும், சராசரியாக 6,690  டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபான விற்பனையில் தமிழக அரசு இலக்கும் நிர்ணயித்தது. இதனால் அரசுக்கு படிப்படியாக உயர்ந்து ஆண்டுக்கு, ரூ.20 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைத்தது. நாளடைவில் மதுவால் ஏற்பட்டும் விபத்துக்கள், இளம்வயதிலேயே பெண்கள் கணவனை பறிகொடுக்கும் கொடுமை போனற பல்வேறு நிகழ்வுகளை கையில் எடுத்துகொண்ட சில கட்சிகள் பூரன மதுவிலக்கை ஆயுதமாக பயன்படுத்தினர்.

அதேபோல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவரவேண்டும் என்றும் உயர்நீதி மன்றத்தையும் சில கட்சிகள் நாடின. மக்கள் மத்தியிலும் மதுபானங்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தது. இதன் தாக்கத்தால் சென்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக., திமுக., மக்கள்நலக் கூட்டணி, பாமக என நான்குமுனை போட்டிகள்  ஏற்பட்டாலும்,  ஒவ்வொரு கட்சியும் முக்கிய ஆயுதமாக எடுத்துக்கொண்டது பூரண மதுவிலக்கு என்றே கூறப்படுகிறது.

பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிபடி முதற்கட்டமாக தமிழகத்தில் 500 அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதைதொடர்ந்து பாமக தொடர்ந்த வழக்கின்படி நெடுஞ்சாலைகள் மற்றும் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்திரவிட்டது. இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஒருசில அரசு டாஸ்மாக் கடைகள் மட்டும்  மூடப்பட்டன. ஒருசில கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை சூறையாடுவதும் பல்வேறு போராட்டங்கள் என தற்போது நடைபெறும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

இதுஒருபுறம் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கள்ளச்சரக்கு விற்பனை ஜரூராக நடந்து வருவதற்கு அதிகாரிகளின் அலட்சியமும், மாமூல் வாங்குவதே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுவாக குடிக்கு அடிமையான கணவர்களால் அதிக பெண்கள் இளம்வயதிலேயே விதவைகளாகின்றனர். இதில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தருமபுரி மாவட்டம் முதன்மையாக திகழ்கிறது. இதைக்காரணம் காட்டித்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி மாவட்டத்தில் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் 101 அரசு டாஸ்மாக் கடைகள் இருந்தது, தற்போது 34 கடைகளாக குறைந்துவிட்டது. கடைகளின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து முக்கிய நகர் மற்றும் கிராமப்புறங்களில் கள்ளச்சரக்கு விற்பனையும் அதிகாரிகள் ஆசியோடு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அரசு டாஸ்மாக் கடைகள் தினசரி 12 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படுவது போக மீதமுள்ள நேரங்களில் சரக்கை பதுக்கிவைத்து, ஒரு குவாட்டர் ரூ.120 முதல், 140 ரூபாய் வரை விற்பனை செய்து கல்லா கட்டுகின்றனர். இதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் கலால் போலீஸார் துணை போவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தருமபுரி நகர் முக்கிய பகுதியில் அதிகாலை முதலே சரக்கு விற்பனை செய்வது போலீஸாருக்கு நன்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காதது அதிகாரிகளின் லாபத்திற்காகவா? அல்லது அதிகாரிகளால் மிரட்டப்படுகிறார்களா? அல்லது கண்டும் காணாமல் போலீஸார் பணத்தை வாங்கி கல்லா கட்டுகின்றனரா? என பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிபடுத்துகின்றனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்டம் டாஸ்மாக் மேலாளர் வில்சன் ராஜசேகரிடம் கேட்டபோது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் மொத்தம், 101 அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டன. அப்போது போதிய இடப்பிரச்னை காரணமாக 3 கடைகள் மூடப்பட்டன. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்தபின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், 15 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

 இதைதொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 49 கடைகள் மூடப்பட்டு, தற்போது 34 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் தினசரி சராசரியாக, ஒரு கோடிக்குமேல் சரக்கு விற்பனை நடக்கிறது.மேலும் கள்ளச்சரக்கு விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தாங்களும் வாரத்திற்கு 3 முறை கலால் போலீஸாருக்கு இது சம்மந்தமாக மனு அளித்து வருகின்றோம். 

அவர்களும் அவ்வப்போது அதிகவிலைக்கு சரக்கு விற்பனை செய்பவர்களையும், கள்ளத்தனமாக சரக்கு விற்பனை செய்பவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல் கடந்த மாதம் மட்டும் மாவட்டம் முழுவதும் இதுதொடர்பாக கலால் போலீஸார் 30 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Label