OUR CLIENTS
இந்தியா உதவியில்லாமல் சர்வதேச முயற்சிகள் வெற்றி பெறாது
இந்தியா உதவியில்லாமல் சர்வதேச முயற்சிகள் வெற்றி பெறாது Posted on 14-Jun-2017 இந்தியா உதவியில்லாமல் சர்வதேச முயற்சிகள் வெற்றி பெறாது

புதுடெல்லி, ஜூன் 14-
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் அதிகாரம் கொடுத்தவர் பிரதமர் மோடி என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாராட்டு தெரிவித்தார்.

மத்தியில் பிரதமர் மோடி அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சி டில்லியில் நடந்தது. இதில் பங்கேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: பெண்கள், இளைஞர்கள்,ஏழைகள் உள்பட சமுதாயத்தில் அனைத்து பிரிவினருக்கும் மத்திய அரசால் திட்டங்களும் நிகழ்ச்சிகளும் தொடங்கப்பட்டு உள்ளது.

பிரதமரானபிறகு பார்லிமெண்டில் முதலாவதாக மோடி பேசும்போது, பலவீமான மற்றும் ஏழை மக்களுக்காக எனது அரசு உள்ளது என்று அறிவித்தார். இலவசங்களுக்கு பதிலாக தனது திட்டங்கள் மூலம் மக்களுக்கு அதிகாரம் கொடுத்தார். மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் மோடி அரசு அதிகாரம் கொடுத்து இருக்கிறது. எங்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் மீட்பு நடவடிக்கையை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக  உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பதட்டமான இடங்களில் இருந்து 1.25 லட்சம் பேரை   வெளியேற்றி இருக்கிறது. ஏமனில் இந்தியர்களை மட்டும் வெளியேற்ற முடியும் என்று நினைத்தோம். ஆனால் 3 பாகிஸ்தானியர்கள் உள்பட 1947 பேரை வெளியேற்றி உதவி செய்தோம். பிரதமர் மோடி தலைமையில் உலக நிகழ்ச்சி நிரலை இந்தியா முடிவு செய்கிறது. 

இந்தியா உதவியில்லாமல் சர்வதேச முயற்சிகள் வெற்றி பெறாது என்று உலக தலைவர்கள் நினைக்கிறார்கள். ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாடலாம் என்று பிரதமர் மோடி கருத்து மட்டும் தெரிவித்தார்.  ஆனால் 75 நாட்களுக்குள் அது 177 நாடுகள் கொண்ட ஐ.நா.சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள்  உங்கள் பகுதிகளில் உள்ள மக்களை வீடு வீடாக சந்தித்து மோடி அரசின் சாதனைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Label