OUR CLIENTS
தேனி மற்றும் திருவண்ணாமலையில் ஆயுஷ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல்
தேனி மற்றும் திருவண்ணாமலையில் ஆயுஷ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் Posted on 14-Jun-2017 தேனி மற்றும் திருவண்ணாமலையில் ஆயுஷ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல்

புதுடெல்லி, ஜூன் 14-
தமிழகத்தில் தேனி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய பிரிவுகள் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

 இதற்கான ஒப்புதலை மத்திய ஆயுஷ் அமைச்சகம் வழங்கியுள்ளது.இந்த மருத்துவ மனைகளில் 50 படுக்கை வசதிகள் இருக்கும் என்றும் இதே போல் நாடு முழுவதும் 100 ஆயுஷ் மருத்துவமனைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மருத்துவ குணம் கொண்ட தாவரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்காக முதற்கட்டமாக 2 கோடியே 83 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசின் ஊதியத்துடன் 4000 ஆயுஷ் மருத்துவர்கள் நியமனத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகரான உயர்தர ஆயுஷ் மருத்துவமனை புதுதில்லியில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Label