OUR CLIENTS
ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.எஸ்.
ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.எஸ். Posted on 14-Jun-2017 ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.எஸ்.

சிரியா, ஜூன் 14-
அமெரிக்கா, ஐரோப்பியா, மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்த இருப்பதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பானது ஓடியோ ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு, அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இச்சம்பவங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஐ.எஸ் அமைப்பானது மேலும் பல தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஓடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, ஆஸ்திரேலியா, இராக், ஈரான், சிரியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்த ரமலான் மாதத்தில் கொடிய தாக்குதல் கட்டவிழ்க்கப்படும் என எச்சரித்துள்ளது.

குறித்த ஓடியோவின் நம்பகத்தன்மையை இதுவரை அரசு அதிகாரிகளால் சோதனை செய்யப்படவில்லை என்றபோதும், கடந்த முறை தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்த அதே குரல் என்பதால், குறித்த ஓடியோவும் ஐ.எஸ் அமைப்பினரால் வெளியிடப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.

ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யா நாடுகளில் உள்ள ஆதரவாளர்கள் இதுவரை செய்தவற்றை நன்றியுடன் நினைவு கூறுவதாக தெரிவிக்கும் அந்த ஓடியோ, அவர்கள் செய்தவற்றை நீங்களும் செய்து காட்டுங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

Label