OUR CLIENTS
ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மாராவி நகரை விரைவில் மீட்போம் பிலிப்பைன்ஸ் ராணுவம் தகவல்
ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மாராவி நகரை விரைவில் மீட்போம் பிலிப்பைன்ஸ் ராணுவம் தகவல் Posted on 14-Jun-2017 ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மாராவி நகரை விரைவில் மீட்போம் பிலிப்பைன்ஸ் ராணுவம் தகவல்

மணிலா, ஜூன் 14-
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அபு சய்யாப் தீவிரவாத குழுவினர் இயங்கி வருகின்றனர். புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து பரவலாக வாழும் இந்நாட்டில் இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்படுத்த ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களை வேட்டையாடி அடிக்குமாறு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்ட்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து நாடு முழுவதும் அபு சய்யாப் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக தலைநகர் மணிலாவில் இருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்டானோ தீவுக் கூட்டத்தில் இஸ்லாமிய இன மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மாராவி நகரில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். 

இப்பகுதியை தலைமையிடமாக தக்க வைத்துக் கொண்டு அபு சய்யாப் தீவிரவாதிகள் நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான தகவல் கிடைத்ததும் ராணுவ படையினர் கடந்த மாதம் முதல் மாராவி நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மாராவி நகரின் மூன்றில் ஒரு பங்கு பகுதிகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பரவியுள்ளதாக அந்த இயக்கத்தின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால், இத்தகவலை மறுத்துள்ள பிலிப்பைன்ஸ் ராணுவம், வெறும் 20 சதவிகிதம் பகுதிகள் மட்டும்தான் அவர்கள் வசமுள்ளது. அதுவும் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. விரைவில் ஐ.எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடி முழு நகரத்தையும் மீட்டெடுப்போம் என தெரிவித்துள்ளது.

Label