OUR CLIENTS
வங்காளதேசத்தில் கடும் நிலச்சரிவு மண்ணில் 25 பேர் புதைந்து பலி
வங்காளதேசத்தில் கடும் நிலச்சரிவு மண்ணில் 25 பேர் புதைந்து பலி Posted on 14-Jun-2017 வங்காளதேசத்தில் கடும் நிலச்சரிவு  மண்ணில் 25 பேர் புதைந்து பலி

டாக்கா, ஜூன் 14-
வங்காளதேசத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வங்காள தேசத்தின் பல இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால், டாக்கா மற்றும் சிட்டகாங் நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. கனமழை காரணமாக ரங்கமாதி மற்றும் பந்தர்பான் ஆகிய மாவட்டங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி ரங்கமாதியில் 10 பேரும், பந்தர்பான் மற்றும் சிட்டகாங்கில் 15 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் கனிசமான பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

Label