OUR CLIENTS
அரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்!
அரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்! Posted on 15-Jun-2017 அரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்!

வேலூர், ஜூன் 15-
வேலூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் பணிபுரியும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள் அரசு அலுவலர்களை மிரட்டுகின்ற நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. இது மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதா? இல்லையா?. அவர்கள் கல்லா கட்டுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 

வேலூர் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் சத்துணவு அமைப்பாளர்களாக கடந்த 1980களில் பணியமர்த்தப்பட்டவர்களில் ஜீவன், ஏழுமலை, வேளாங்கன்னி, குமார் (வேலூர் ஊரிசு பள்ளி) குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்கள் சத்துணவு ஊழியர் நலச்சங்கம் என்ற பெயரில் சங்கம் ஆரம்பித்து வைத்து கொண்டு பெண் அமைப்பாளர்களையும் மிரட்டி பணம் பறிப்பதாக கூறப்படுகிறது. இந்த நலச்ங்கத்துக்கு ஜீவன்தான் தலைவர் ஆவார். மாதா மாதம் அரிசி பருப்பு பட்டியல் தேவைப்பட்டியல் பெறப்படுகிறது. 

இந்த பட்டியலை அமைப்பாளர்கள்தான் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தேவை பட்டியலை அடிப்படையாக கொண்டுதால் சிவில் சப்ளைஸ் குடோனில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் சத்துணவு மையங்களுக்க குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. தேவைப்பட்டியல் வழங்கும் போது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு அமைப்பாளரும் தலா ரூ.500 வழங்க வேண்டுமாம். 

இப்படி எழுதப்படாத சட்டமாக இது உள்ளது. இந்நிலையில் வேலூரில் மட்டும் 95 மையங்கள் உள்ளன. மற்றவற்றை கணக்கு பார்த்தால் தலை சுற்றி விடும். இப்படி மாவட்டம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களிலும் பெண் அமைப்பாளர்களை மிரட்டி பணம் பறிப்பு நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டிய மாவட்ட சத்துணவு அலுவலர் கோதண்டராமன் எதைப்பற்றியும் கவலைப்படுவதாக இல்லை. மாறாக கல்லா கட்டுவதில் மட்டும் குறியாக உள்ளார். 

இவருக்கு தனியாக ஒரு ஜீப் வழங்கப்பட்டுள்ளது. இதை ஆய்வுக்கு எடுத்துச் சென்றதாக வரலாறே இல்லை என்று அடித்து கூறலாம். இவர் வீட்டில் இருந்து அலுவலகம் வரவும், இவரது குடும்பத்தினர் கடைகள், திரையரங்குககள் செல்ல மட்டும் அதாவது செந்த உபயோகத்துக்கு மட்டும் அர வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்.  இப்படிமாவட்டம் முழுவதும் வசூலாகும் பணத்தை ஜீவன் உள்ளிட்ட நால்வரும் பங்கு பிரித்து கொள்கிறார்களாம். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்காமல் இருக்க உயர் அலுவலர்களுக்கு எப்படி மனது வருகிறது என்பதே தெரியவில்லை..

இதே போன்று மானியம் சத்துணவுக்கு வழங்கப்படுவதை பெற கருவூல செலவு என காரணம் காட்டி ஒவ்வொரு  மையத்துக்கும் தலா ரூ.100 வசூலிக்கின்றனர் ஜீவன் அண்ட் கோ  என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி இவர்கள் வசூலிக்கும் தொகையை  யாருக்கும் கொடுப்பதில்லையாம். அபபடியே ஸ்வாகா விடுகிறார்களாம். சத்துணவு  பிரிவி ல் கம்ப்யூட்டர் பில் பிரிவில்  பணியாற்றும் சுதாகர் என்பவர் தனது சொந்த கணக்கில் அரசு பணத்தை அதுவும் சத்துணவு பணத்தை ரூ.40 லட்சத்தை  மாற்றிக் கொண்டார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அண்மையில்  சத்துணவு  அமைப்பின் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  கோதண்டராமன்  கொடுத்துள்ளார். ஜீவன், வேளாங்கன்னி, குமார், ஏழுமலை ஆகியோருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி உறுதுணையாக, பின்புலமாக செயல்படுகிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் எங்கு எந்த சத்துணவு அமைப்பாளர்களை உயரதிகாரிகள் தட்டிக் கேட்டாலோ, கண்டித்தாலோ ஜீவன் கோஷ்டியினர் உடனடியாக அங்கு சென்று அதிகாரிகளை மிரட்டும் பணியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற அசாதாரண சூழல் சத்துணவு துறையில் உலா வந்து கொண்டுள்ளது. இது மாவட்டஆட்சியர் ராமனுக்கு தெரியுமா? தெரியாதா?. இதுகுறித்து உரிய துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மாவட்ட நிர்வாகம்.  சத்துணவு அமைச்சர் சரோஜாவும்  வேலூர் மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் இப்படி அடுக்கடுக்கான  புகார்கள் சத்துணவில் வந்து கொண்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவது ஆரோக்கியமானது அல்ல. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோதண்டராமன் வில்லை வளைக்கிறாரா? மாவட்ட ஆட்சியர் ராமன் இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு காண்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label