OUR CLIENTS
சென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு!
சென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு! Posted on 15-Jun-2017 சென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு  மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு!

சென்னை, ஜூன் 15-
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரி தன்னாட்சி கல்லூரியாகும். இங்கு அதிகாரிகள் சொல்பவர்களுக்கு மட்டும் சீட்டு தருகிறார்கள். மற்றவர்கள் யாரேனும் சென்று கேட்டால் வைத்து விடுகிறார்கள் அதிர்வேட்டு.

 இப்படி இந்த கல்லூரி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளது. சென்னை தமிழகத்தின் தலைநகராக விளங்குகிறது. இங்கு பல மாவட்டங்கள் மட்டுமல்லாது பல மதம், மொழி, இனத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தற்போது மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் காவல் துறையைச் சேர்ந்த ஏசி, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் போன்றோர் சிபாரிசு செய்பவர்களுக்கு மட்டும் உடனடியாக சீட்டு தரப்படுகிறது. மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு என்று சொன்னால் அது மிகையாது. மதிப்பெண் அதிகம் இருந்தாலும் சீட்டு கிடைப்பதில்லை. ஆனால் சிபாரிசு இருந்தால் மட்டுமே சீட்டு வழங்கப்படுகிறது. பி.காம்., பாடப்பிரிவில் சேரவே இங்கு மாணவிகள் அலைமோதுகின்றனர். 

இந்த கல்லூரியின் முதல்வரை அட்மிஷன் நேரத்தில் பார்க்கவே முடியாதாம்.  அதிகாரிகளை மட்டும் ரகசியமாக சந்தித்து அவர்கள் சொல்லும் நபர்களுக்கு சீட்டு வழங்கி விடுகிறாராம். இவரைப் போன்றே அடுத்தநிலையில் பணியாற்றும் துணை முதல்வர். இருவரும் ஒரே வண்டியில் பூட்டிய மாடுகள் போன்று செயல்படுகின்றனர். பல மாணவிகள் மதிப்பெண் அதிகம் இருந்தும் சீட்டு கிடைக்காமல் மனம் வெதும்புகின்றனர். ஆனால் மதிப்பெண் குறைவாக எடுத்தவர்களுக்கு சீட்டு எளிதில் கிடைத்து விடுகிறது. 

இதிலும் ஈகோ, சிபாரிசு புகுந்துவிட்டது. லஞ்சம்  போன்று இதையும் முளையிலேயே களைய வேண்டும். நேர்மையாக திறந்த நிலையில் அட்மிஷன் நடைபெற வேண்டும். இப்படி இவர்கள் செயல்பட இவர்களுக்கு நிகரில்லா அதிகாரத்தை வழங்கியவர்கள் யார்? என்பது இன்றைய கேள்வியாக உள்ளது. கல்வியில் கூட பாரபட்சம் ஏன்?. மதிப்பெண் அதிகம் பெற்றும் என்ன பயன்?. 

இதை தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பெற்றோர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். பேரு பெத்த பேரு என்று சொல்வது போன்று இவர்களது செயல்பாடு மிகவும் கீழ்த்தரமாக உள்ளது.  அடுத்தவர்கள் குறை சொல்வது போலவா கல்லூரியை நடத்துவது. போற்றி புகழும் அளவுக்கு மாணவிகளுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டிய பேராசியர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் சிபாரிசு கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இங்கும் அரசியல் போன்று நடப்பது வருத்தத்துக்கு உரியதாகும். இந்த கல்லூரியில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் நடந்துள்ள அட்மிஷன் முறைகேடுகள் குறித்து விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட  வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், பெற்றோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. சட்டசபை நடைபெறும் வேளையில் மக்கள் மனதில் உள்ள இந்த வேதனைக்கு தீர்வு கிடைக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label