OUR CLIENTS
பெரியமேடு காவல் நிலையத்துக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை!
பெரியமேடு காவல் நிலையத்துக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை! Posted on 15-Jun-2017 பெரியமேடு காவல் நிலையத்துக்கு  குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை!

அம்பத்தூர், ஜூன் 15-
சென்னை பெருநகரம் என்று போற்றப்படும் சென்னை மாநகராட்சியின் அருகே அமைந்துள்ள பெரியமேடு காவல் நிலையம் ஜி2. 

இந்தகாவல் நிலையம் எதிரே புகழ்பெற்ற மசூதி அமைந்துள்ளது. இப்போது ரமலான் நோன்பு நாட்கள் தொடர்ந்து இருக்கிறது என்பதால் பெருவாரியான இஸ்லாமிய மக்கள் தொழுகைக்கு வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் தொழுகை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது மர்மநபர்களால் பல்வேறு பிரச்னை களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இதனை தடுக்க காவல் நிலையம் செல்லும் போது குற்றப்பிரிவில் ஆய்வாளர் இல்லை என்றும், இரண்டு மாதமாக உதவி ஆய்வாளர்கள் மற்றும் சட்டம்&ஒழுங்கு ஆய்வாளர்கள் இருப்பதாக கூறுகின்றனர். 

பண்டிகைக்காலம் மட்டுமன்றி பொதுவாக மக்களை காப்பாற்றவும் ஆய்வாளர்கள் தேவை. ஒரு ஆய்வாளரை வைத்து கொண்டு இதுபோன்ற பிளாக் மார்க் ஏரியாவை (கடினமான) அந்த எல்லைக்குள் சமாளிக்க தகுந்த ஆய்வாளர் உடனே காவல் துறையால் நியமிக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. 

மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் மக்களின் அத்தியாவசிய தேவை அறிந்து மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் நோக்கில் குற்றப்பிரிவு ஆய்வாளரை இந்த காவல் நிலையத்துக்கு நியமிக்க வேண்டும் என்பதே இந்தப்பகுதிவாழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். 

Label