OUR CLIENTS
லண்டன்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
லண்டன்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து Posted on 15-Jun-2017 லண்டன்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

லண்டன், ஜூன் 15-
மத்திய லண்டனின் லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவியதால் குடியிருப்புவாசிகளில் பலர் கட்டிடத்தினுள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 
27 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் தீ விபத்தில் காயமுற்றோருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். 

கட்டிடத்தில் தீயை அணைக்கும் பணிகளில் 40 தீயணைப்பு வாகனங்கள், 200-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் சிக்கிய பலருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. 

அதிகாலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் மீட்கப்படும் குடியிருப்புவாசிகளுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

Label