OUR CLIENTS
மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் Posted on 16-Jun-2017 மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி,  ஜுன் 16-
இறைச்சிகாக மாடு உள்ளிட்ட கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இறைச்சிக்காக கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்து கடந்த மே 23-ம் தேதி மத்திய அரசு புதிய அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.  இதனையடுத்து புதிய கால்நடை சந்தை கட்டுப்பாட்டு விதிகளுக்கு தடை விதிக்க கோரி ஐதராபாத்தை சேர்ந்த தனியார் அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் தீபக் குப்தா ஆகியோ கொண்ட அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது. அப்போது, இறைச்சிகாக மாடு உள்ளிட்ட கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.  அந்த நோட்டீஸில் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வருகின்ற ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Label