OUR CLIENTS
ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டி: இந்திய வீரர் தோல்வி
ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டி: இந்திய வீரர் தோல்வி Posted on 09-Aug-2016 ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டி: இந்திய வீரர் தோல்வி

ரியோ:
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிற்கு ஏமாற்றமே நீடித்து வருகிறது. முன்னணி வீரர்கள் உட்பட அனைவரும் சொதப்பி வருகின்றனர்.


இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில், ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில், இந்திய வீரர் சஜன் பிரகாஷ் 4-வது இடம் பிடித்தார். இருப்பினும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அவர் இழந்தார்.

சிலர் ஒலிம்பிக்கில் சாதனை செய்வதற்காக செல்வார்கள். சிலர் பங்கேற்பதற்காகவும், எதிர்காலத்திற்காக முன்னேற்றத்தை வெளிப்படுத்தவும் செல்வர். சஜன் பிரகாஷ் 4-வது இடம் பிடித்துள்ளது, எதிர்காலத்தில் தனது சவால்களை கடக்க இது உதவும்.

Label