OUR CLIENTS
குண்டு குழந்தைகளில் இந்தியா 2வது இடம்
குண்டு குழந்தைகளில் இந்தியா 2வது இடம் Posted on 16-Jun-2017 குண்டு குழந்தைகளில் இந்தியா 2வது இடம்

வாஷிங்டன், ஜூன் 16-
உலகம் முழுவதும் குண்டு குழந்தைகள் பற்றி தி நியூ இங்கிலாந்து ஜோர்னல் ஆப் மெடிசின் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. உலகிலேயே குண்டான குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 

1.43 கோடி குழந்தைகள் அதிக எடையுடன் உள்ளனர். முதலிடம் பிடித்த சீனாவில் குண்டு குழந்தைகள் எண்ணிக்கை 1.53 கோடி ஆகும். உலகம் முழுவதும்  200கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள்  உடல்பருமன் நோயால் அவதிப்படுவது தெரிய வந்தது. அதே போல குண்டுமனிதர்கள், குழந்தைகளின் இறப்பும் அதிகமாகி வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.   கடந்த2014ம்  ஆண்டில் மட்டும் 40 லட்சம் பேர் உடல் பருமன் காரணமாக உயிரிழந்தனர்.உடல் எடை அதிகமான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமுள்ள நாடுகளில் பட்டியலில், அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.    அதிகமான உடல் எடை  கொண்ட பெரியவர்கள் பட்டியலில் எகிப்து முதலிடத்தில் இருக்கிறது.  உடல் எடை அதிகமானவர்கள் மிக குறைவாக உள்ள நாடுகளில் வங்கதேசும், வியட்நாமும் உள்ளன.  

Label