OUR CLIENTS
இந்தியா&பாக். பிரச்னை குறித்து ஷாங்காய் கூட்டமைப்பில் விவாதம் இல்லை
இந்தியா&பாக். பிரச்னை குறித்து ஷாங்காய் கூட்டமைப்பில் விவாதம் இல்லை Posted on 16-Jun-2017 இந்தியா&பாக். பிரச்னை குறித்து ஷாங்காய் கூட்டமைப்பில் விவாதம் இல்லை

பெய்ஜிங், ஜூன் 16-
இந்தியா, பாகிஸ் தான் நாடுகள் தங்களுக்கிடையேயான பிரச்சினைகளை ஷாங்காய் கூட்டமைப்பில் எழுப்ப முடியாது என்று சீனா திட்டவட்டமாக கூறியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இந்த ஆண்டு முதல் உறுப்பினராக இணைந்துள்ளன. இந்தக் கூட்டமைப்பின் தலைவராக சீனா செயல்பட்டு வருகிறது.  ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாடு சமீபத்தில் கஜகஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் நடைபெற்றது. இதில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சீனாவில் உள்ள ஷாங்காய் கூட்டமைப்பின் தலைமையகத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தேசியக்கொடிகளை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சீனா சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காங் ஜுயான்யு பங்கேற்றார். இந்தியத் தரப்பில் சீன தூதர் விஜய் கோகலேவும், பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு தூதர் மசூத் காலித்தும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காங் ஜுயான்யு, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் இணைவதில் இந்தக் கூட்டமைப்பின் நிறுவனர் என்ற முறையில் சீனா மகிழ்ச்சி அடைகிறது என்று தெரிவித்தார்.பின்னர் காங் ஜுயான்யு செய்தியாளர்களிடம் கூறியதாவது:   கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் தங்களுக்கு இடையேயான தனிப்பட்ட பிரச்சினைகளை கூட்டமைப்பிற்குள் நுழைக்கக் கூடாது என்று விதி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அதை கடைபிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் இந்தப் பகுதியில் முக்கியமான இருநாடுகளாக உள்ளன. 

மேலும், சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்றும் வளரும் நாடுகள் என்ற சமமான நிலையில் இருக்கின்றன. மூன்று நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை சந்தித்து வருகின்றன. இந்த சவால்களை முறியடிப்பதில் மூன்று நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு இந்தக் கூட்டமைப்பு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.  இவ்வாறு காங் ஜுயான்யு கூறினார்.

Label