OUR CLIENTS
சோமாலியா தலைநகரில் தற்கொலைப்படை தாக்குதல் 18 பேர் பலி
சோமாலியா தலைநகரில் தற்கொலைப்படை தாக்குதல் 18 பேர் பலி Posted on 16-Jun-2017 சோமாலியா தலைநகரில் தற்கொலைப்படை தாக்குதல் 18 பேர் பலி

மொகதீசு, ஜூன் 16-
சோமாலியாவில் மிகவும் பிரபலமான இரண்டு உணவு விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் பலியானார்கள் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

சோமாலியா தலைநகர் மொகதீசுவில் உள்ள போஸ்ட் ட்ரீட்ஸ் ரெஸ்டாரென்ட்ஸ் மற்றும் பீசா ஹவுஸ் ரெஸ்டாரென்ட் ஆகிய இரண்டும் பிரபலமானவை அருகருகே இருப்பவை.
போஸ்ட் ட்ரீட்ஸ் ரெஸ்டாரென்ட்ஸ் மீது கார் ஒன்றில் வந்த பயங்கரவாதிகள் முதலில் புதன் கிழமை இரவு 8 மணிக்குத் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் பீசா ஹவுஸ் உணவு விடுதிக்குள் நுழைந்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகள் பீசா ஹவுஸ் உணவு விடுதிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இரண்டு விடுதிகளிலும் தரைத்தளத்தில் கண்ணில் பட்டவர்கள மீதெல்லாம் அவர்கள் குண்டு மழை பொழிந்தனர்.  இந்த தாக்குதலில் பொதுமக்கள் 18 பேர் உயிரிழந்தனர், மற்றும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு வந்தனர். இரண்டு உணவு விடுதிகளையும் முதலில் முற்றுகையிட்டனர்.

 அவர்கள் சுட்டுக கொண்டே முன்னேறினார்கள். பயங்கரவாதிகள் முதல் தளத்துக்கும் கூரைக்கும் சென்று அங்கிருந்து பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.    பயங்கரவாதிகள் குறிவைத்த உணவு விடுதிகள் ரம்ஜான் நோன்புக்காலத்தில் இரவு நேரத்தில் மிகவும் பரபரப்பாக இருக்கும். அதனால் பாதுகாப்புப் படையினர் உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

Label