OUR CLIENTS
இரட்டை இலை சின்னம் விவகாரம்: பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்வதில் தேர்தல் கமி‌ஷன் திணறல்
இரட்டை இலை சின்னம் விவகாரம்: பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்வதில் தேர்தல் கமி‌ஷன் திணறல் Posted on 17-Jun-2017 இரட்டை இலை சின்னம் விவகாரம்: பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்வதில் தேர்தல் கமி‌ஷன் திணறல்

சென்னை, ஜூன் 17-
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி. மு.க 2 அணிகளாக பிரிந்தது. ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி. மு.க அம்மா அணியும் செயல்பட்டு வருகின்றன.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஓ. பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மதுசூதனன் விருப்பம் தெரிவித்தார். அதேபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் டி.டி.வி தினகரனும் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ், எடப்பாடி அணியினர் இருவருக்கும் இடையே இரட்டை இலை சின்னத்தை பெற கடும் போட்டி நிலவியதால் தேர்தல் கமி‌ஷன் இரட்டைஇலை சின்னத்துக்கு தடை விதித்தது. மறு உத்தரவு வரும் வரை ‘இரட்டை இலையை’ யாரும் பயன்படுத்த கூடாது எனவும் அறிவித்தது.

2 அணிகளும் கட்சி தலைமைக்கு உரிமை கோரும் ஆவணங்களை ஜூன் 16-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டது.

ஓ. பன்னீர்செல்வம் தலைமையை ஆதரித்து லட்சக்கணக்கான அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட 3,84,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் 6,82,805 பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் 52,000 பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக 3 அணிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களை எந்த அடிப்படையில் ஆராய்வது என்ற குழப்பத்தால் தேர்தல் கமி‌ஷன் திணறியது.

இது குறித்து தேர்தல் ஆணைய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்தல் கமி‌ஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரங்களை சரிபார்க்க குழுக்களை அமைப்பதா? அல்லது வேறு உத்திகளை கையாளுவதா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் 1 வாரத்தில் முடிவு செய்யும். அதன் பிறகு 2 தரப்பு அணிகளும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு அதன் அடிப்படையில் தனது முடிவை தெரிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Label